கேளடா மானிடவா

Friday, January 25, 2013



கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓருதரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

     -    மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்
 

- அன்புடன்
***** தினேஷ்மாயா****  

0 Comments: