காணி நிலம் வேண்டும்

Saturday, January 12, 2013




காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

- மகாக்கவி பாரதியார்

அப்போதே என் பாரதி எவ்வளவு அழகாக தன் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறான் பாருங்கள். அழகான தென்னை மரங்கள், நிலவொளி, குயிலோசை, இளந்தென்றல், பத்தினி, களவு, கவிதைகள், பராசக்தியின் காவல்... பாரதியின் இந்த கவிதையைவிட இதிலிருக்கும் அவனது இரசனையை அதிகம் இரசிக்கிறேன் நான்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: