மூன்று குறிக்கோள்கள்

Tuesday, January 01, 2013




 வழக்கமாக எந்த புது வருடத்திற்குமென புதிதாய் எந்த குறிக்கோளும் எடுக்க மாட்டேன். எதாவது என் வாழ்வில் மாற்றவேண்டும் என்று நினைத்தால் உடனே மாற்றிக்கொள்வேன். சரி ஒரு மாற்றத்திற்காக இந்த புது வருடத்தில் மூன்று குறிக்கோள்கள் எடுத்திருக்கேன்.

*   ( இயன்றவரை ) தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.
*   வழக்கம்போல் மீண்டும் தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும்.

*   வையில்லாத அநாவசியமான செலவுகளை குறைத்துக்கொண்டு கொஞ்சம்  சேமிக்க வேண்டும்.


இது மட்டும்தான் கடைப்பிடிப்பேன் என்றில்லை. மனதிற்கு தோன்றும் மாற்றங்களை அன்றைக்கே அமலுக்கு கொண்டுவந்திடுவேன். எதற்கும் இந்த ஆண்டில் இருந்து இதை செய்துவருகிறோம் என்று சொல்லிக்கொள்ள ஒரு வருடம் வேண்டுமே. தேநீர், பால், காபி இவை மூன்றையும் நான் பருகுவதில்லை. 2000 புது வருடம் பிறக்கும்போது நிறுத்தியது இன்றுவரை பருகுவதில்லை. அதுபோல 2013 வருடத்தில் இருந்து தினமும் அதிகாலையில் எழுகிறேன் என்று சொல்லிக்கொள்ளலாம் இல்லையா. 


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: