திருப்பங்களை திரும்பி பார்க்கிறேன்..

Tuesday, January 01, 2013



2005 - உயிர்தோழி என்று என் வாழ்வில் முதன்முறையாக ஒருத்தி வந்தாள்.

2006 - பள்ளியில் இருந்து கல்லூரி என்னும் புது வாழ்க்கை என்னை அழைத்தது சென்னைக்கு. சென்னை- வாழ்க்கையையும் மக்களையும் எனக்கு நன்றாக எடுத்துரைத்தது.

2007 - கல்லூரியில் எனக்கு மிகப்பெரிய, வாழ்க்கைக்கு தேவையான மிகவும் தேவையான திருப்பம் என் வாழ்வில் நடந்தேரியது. அதுதான் என்னை இங்கே இந்த நிலைக்கு ஆளாக்கியது என்றும் சொல்வேன் நான். அவமானம், துரோகம், நட்பு, காதல், உலகம், வாழ்க்கை, பொய், உண்மை, கடவுள் இப்படி பலவற்றை நான் நன்கு தெரிந்துக்கொண்டேன்.

2008 - பத்தாவது வரை என்னுயிர் தோழனாய் இருந்தவனை பல வருடங்கள் கழித்து ரயிலில் சந்தித்தேன். அதுவும் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாய். ஆனால் அந்த நிலையிலும் என்னை பார்த்ததும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான் அவன். அந்த நட்பை திரும்ப கண்ட வருடம்.

2009 -  இன்போசிஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தினேஷ்குமார் என்றிருந்த நான், தினேஷ்மாயா என்று மாறிய வருடம். எனக்கென ஒரு வலைப்பக்கத்தை துவங்கிய வருடம்.

2010 - என் மனதிற்குள் நான் வரைந்திருந்த மாயாவின் உருவம் போல ஒரு பெண் என் கண் முன் இந்த வருடத்தில் தோன்றினாள். சில கால அவளுடன் பழகி பேச வாய்ப்பு கிடைத்தது.

2011 - என் 21-வது வயதிலேயே அரசு வங்கியான சிண்டிகேட் வங்கியில் துணை மேலாளராக கர்நாடகாவில் பணியில் அமர்ந்தேன். சில மாதங்களில் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைகிடைத்து என் தாய் தமிழகத்திற்கே திரும்ப வந்துவிட்டேன். என் தாத்தா தவறினார். என்னவளின் தந்தையும் தவறினார். 

2012 - 7 வருட காதல் திருமணத்தில் முடிந்தது. பொறுத்திருங்கள். எங்கள் காதல், அவளது திருமணத்தில் முடிந்தது. நான் இந்திய ஆட்சிப்பணி தேர்விற்காக பல தியாகங்களை செய்து படித்துவந்த வேளையில் என் படிப்பிற்காகவும் தந்தையை இழந்து தவிக்கும் தன் குடும்பத்திற்காக அவள் தன் காதலையும் தியாகம் செய்துவிட்டு வேறு திருமணம் செய்துக்கொள்ளும் முடிவை எடுத்தாள். ஒரு கதவு அடைக்கப்பட்டால், மற்றொரு கதவு திறக்கும் என்பார்கள். மார்ச் மாதம் 2011-ஆம் ஆண்டு நான் எழுதிய தேர்வு மூலம் மத்திய ஆயத்தீர்வை ஆய்வாளர் பதவிக்கு தேர்வானேன். சுயமுயற்சியால் இந்தளவு தூரத்திற்கு வந்தது எனக்கும் என்னை சார்ந்தவர்க்கும் பெருமையை தந்தது. வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல ஓர் புதிய வாய்ப்பு. 
இமயம் அறக்கட்டளையின் சார்பாக பல ஆசிரமங்களுக்கு சென்று ஆதரவற்ற சிறார்களுடன் பழகினோம். திண்டுக்கல் அருகே இருக்கும் பஞ்சம்பட்டியில் இருக்கும் ஓர் ஆசிரமத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளின் அன்பும் பாசமும் எங்களுக்கு கிடைக்க செய்தான் இறைவன். 


2013 - இன்றுதான் பிறந்திருக்கிறது. பார்ப்போம். இன்னும் 364 நாட்கள் இருக்கிறது. பல நல்ல நிகழ்வுகள் நமக்காக காத்திருக்கிறது. பொறுத்திருந்து ரசிப்போம் இந்த வருடத்தை.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

2 Comments:

Unknown said...

2013 இன்னும் பல திருப்பங்களை சந்திக்க வாழ்த்துக்கள்.

பாரதி.

தினேஷ்மாயா said...

மிக்க நன்றி பாரதி..