இன உணர்ச்சி !!

Thursday, January 31, 2013



அன்று ஈழப்போரின்போது அப்பாவி தமிழர்களை வெளிக்கொண்டுவர ஒரு தமிழனும் முன்வரவில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தை  எத்தனையோ தமிழர்கள் தங்கள் உயிரையும் தர தயார் இன்று. 

என்னே என் தமிழனின் இன உணர்ச்சி !!

கலைக்கும் கலைஞனுக்கும் தரும் ஒரு அங்கீகாரத்தையும் ஆதரவையும் ஈழத்தமிழனுக்கும் அவனது உயிருக்கும் கொடுக்கவில்லையே இன்று போராடும் என் தமிழர்காள்...

வெட்கித் தலைகுனிகிறேன் நான்..

பின்குறிப்பு: நானும் கமல் ரசிகன் தான். அதற்கும் மேலாக நான் ஒரு தமிழன்..

- தினேஷ்மாயா -

மாங்காய்

Monday, January 28, 2013



தமிழகத்தில் சித்திரை மாதம் துவங்கிவிட்டாலே, மாங்காய் வரப்பும் சந்தையில் அதிகமாகிவிடும். பெரும்பாலான மக்கள் மாங்காயை மேலே இருப்பதுபோன்ற ரசனை மிகுந்த கலவையில் சுவைப்பார்கள். நானும்தான். சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது என்பதால் இங்கே பதிந்தேன்.

- தினேஷ்மாயா -

மூன்றாவது கண்



    பலரும் இவ்வுலகை இறைவன் கொடுத்த இரண்டு கண்களால் மட்டுமே  பார்த்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே இறைவன் மறைத்து வைத்திருக்கும் மூன்றாவது கண்ணால் இவ்வுலகை பார்க்கின்றனர்.

     நான் இந்த உலகத்தை என் மூன்றாவது கண் கொண்டு பார்க்கும்போது என் மனதை வருடிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவைகளை இங்கே  இனிவரும் பதிவுகளில் கொஞ்சம் பதியலாம் என்றிருக்கிறேன்.

- தினேஷ்மாயா -

பிரச்சனை



பிரச்சனயே வாழ்க்கை என்று

பலர் சலித்துக்கொள்வார்கள்...

ஆனால்,

பிரச்சனைகள் இல்லையேல்,

அது வாழ்க்கையே இல்லை.

- தினேஷ்மாயா -

மீசைவெச்ச குழந்தையப்பா



“ பாசமுள்ள மனிதனப்பா,
நான் மீசைவெச்ச குழந்தையப்பா”

இந்த வரிகள் இவனுக்கும் பொருத்தமாய் இருக்கும் என்று நினைத்தேன்.. அதான் இங்கே பதிந்தேன்...

- தினேஷ்மாயா -

சித்திரம் பேசுதடி

Sunday, January 27, 2013




 இன்று சித்திரம் பேசுதடி திரைப்படத்தை முதல்முறையாக முழுதும் பார்த்தேன். வழக்கமாக எனக்கு மிஷ்கின் படமென்றால் கொஞ்சம் இஷ்டம். இந்த படத்தைத்தவிர அவரின் மற்ற படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கேன். 

  இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு. மிஷ்கினின் அனைத்து படங்களிலும் கதாபாத்திரங்கள் எப்போதும் வேகமாகவும் கொஞ்சம் அதிக சத்தத்துடனும் வசனம் பேசுவார்கள். அது முதல் படம் தொடங்கி இப்போ வரைக்கும் நடந்து வருகிறது. “இடம் பொருள் பார்த்து” பாடல் அதிகம் கவர்ந்தது. வரிகளும் சரி, காட்சியமைப்பும் சரி. Reverse Shots அந்த பாடலில் நிறைய இருந்தது. அதுவும் ரசிக்கும்படியாக இருந்தது. 




  கதையும் நன்றாக இருந்தது. வழக்கமாக இடைவேளை, Interval, Intermission என்று போடாமல் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாரதியின் வரிகளை போட்டது நன்றாக இருந்தது. ஒரு சோகமான முடிவை தராமல் சுகமான முடிவை தந்திருக்கிறார் இயக்குனர். கானா உலகநாதனின் பாடலும் சரி, மற்ற பாடல்களும் சரி, பிண்ணனி இசையும் சரி, சுந்தர்.சி.பாபு அருமையாக விளையாடியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் போலவே தெரியவில்லை.




   படம் வெளிவந்து சில ஆண்டுகள் ஆனபின்பு விமர்சனம் எழுதுகிறேன். இருந்தால் என்ன, நான் இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். 

 படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் உரக்கப் பேசுவதும், வேகமாய் பேசுவதும் தான் சற்று நெருடலாய் தெரிகிறது. மற்ற விஷயங்கள் எதார்த்தமாய் இருக்கும்போது, வசன உச்சரிப்பும் எதார்த்தமாய் இருக்கலாமே.
எல்லோரும் எப்போதும் இப்படி வேகமகவும் உரக்கமாகவும் பேசுவதில்லையே நிஜத்தில்.  ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனி ரசனை உண்டு. இது இவர் ரசனை போல.




  படத்தில், காதலை மென்மையாக காட்டியிருக்கிறார். அடிதடி படம் என்றும் சொல்லிவிட முடியாது. கதாநாயகன் அடியாள் என்றாலும் அதிகம்  சண்டை காட்சிகள் இல்லை. ஓரிரு சண்டை காட்சிகள் கதைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வில்லன் என்று எவரும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். அப்படி இருந்திருந்தால், வழக்கமான கதையாக இருந்திருக்கும்.




எல்லாவற்றையும்விட, படம் முடிந்து அனைவரும் The End என்று தான் போடுவார்கள். இந்த திரைப்படத்தில் The Beginning..... என்று போட்டார்கள். அதுவே என்னை அதிகம் கவர்ந்தது. அதனால்தான் முதலில் இந்த படத்தை பற்றி கொஞ்சம் எழுதிவிடுவோம் என்று இங்கே வந்தேன். பொதுவாக ஒரு படம் பார்த்து முடித்துவிட்டால் அதை என் கணிணியில் இருந்து நீக்கிவிடுவேன். ஒருசில படங்களை மட்டும் நீக்காமல் தனியாக வைத்திருப்பேன். இப்போது அந்த இடத்தில் இந்த படமும் இடம்பிடித்திருக்கிறது, காரணம்...

எனக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது...

- தினேஷ்மாயா -

ரொம்ப நாளாச்சு



மனம் விட்டு கதறி அழுது

ரொம்ப நாளாச்சு..

மனம் பக்குவப்பட்டுவிட்டதா?,

இல்லை

அழுவதற்கு ஏதும் கவலை இல்லையா?,

இல்லை

நான் அழுதால் ஆறுதல் சொல்ல

யாருமில்லையா ?

என்று தெரியவில்லை..

- தினேஷ்மாயா -

இன்னும் கொஞ்ச நேரம்



வாழ்வில் சில தருணங்களில்இன்னும் கொஞ்சம் நேரம்என்று மனசு கேட்கும் ஆனால் அந்த கொஞ்ச நேரம் கிடைத்திருக்காது. அதுபோன்ற தருணங்களை என் மனதிடம் இருந்து கடன்வாங்கி அசைப்போட்டு பார்க்கிறேன்.   

@ பலநாட்கள் கழித்து என் ஊரில் இருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன். இரயில் பயணம் என்றாலே எனக்கு அலாதி பிரியம். சென்னையை இரயில் நெருங்கும்போது, 5 மணிநேரம் பயணித்திருந்தாலும், இன்னும் கொஞ்ச நேரம் இரயிலில் பயணிக்கலாமே என்று மனம் கேட்கும்.   

@ கல்லூரியில் என் மனதிற்கு பிடித்த தோழி ஒருத்தியுடன் 2011 ஆங்கில புத்தாண்டு அன்று பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவளும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். அவள் செல்கிறேன் என்று சொன்னபோது, இன்னும் கொஞ்ச நேரம் என்று மனசு கேட்டது.

@ ஊர் திருவிழாவில் அவளும் நானும் ராட்டினத்தில் ஒன்றாக அமர்ந்தோம். அவள் என்னை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள். ராட்டினம் நிற்கும்போது இன்னும் கொஞ்ச நேரம் என்று மனசு கேட்டது.

@ விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை முதலில் திரையில் பார்க்கிறேன். படம் என் வாழ்க்கையை போலவே இருந்தது. படம் முடியும் போது இன்னும் கொஞ்ச நேரம் என்று மனம் கேட்டது.


@ அவளை தேர்வு ஒன்றுக்கு தொலைதூரம் அழைத்து சென்றிருந்தேன். தேர்வு முடிந்து அவளும் நானும் பேருந்தில் வந்துக்கொண்டிருந்தோம். அவள் என் தோழில் சாய்ந்து, கதைப்பேசி வந்தாள். நானும் கேட்டுக்கொண்டே வந்தேன். பயணம் முடியும்போது, இன்னும் கொஞ்சம் என்று மனம் கேட்டிருந்தாலும் பரவாயில்லை, இந்த பயணம் முடியாமலே இருக்காதா என்று மனசு ஏங்கியது.   

இப்படி இன்னும் நிறைய இருக்கு, நேரம் கிடைக்கையில் மீண்டும் அசைபோடுகிறேன்.


- தினேஷ்மாயா -

இசை வெள்ளம்




                முன்பெல்லாம் இசை என்றால் கேட்க இனிமையாக இருக்கும். இப்போதெல்லாம் வெளிவரும் பல திரையிசை பாடல்களை கேட்டால் தலைவலிதான் அதிகம் வருகிறது. அதிகமான இசைக்கருவிகளை இசைக்கவிட்டு தேவையில்லாத இடத்தில் அதிகம் இசை எழுப்பி இசை வெள்ளத்தை ஏற்படுத்துகின்றனர். நாங்கள் இசை வெள்ளத்தில் நீச்சல் தெரியாமல் தவிக்க விரும்பவில்லை. ஒரு சின்ன ஆற்றங்கரையில் ஓரம் நின்று ஆற்றை ரசிக்கவே விரும்புகிறோம். வெளிநாட்டு கலாச்சாரம் நம் திரையிசையிலும் ஆதிக்கம் செலுத்துவதை பார்க்கும்போது மனம் நொந்துக்கொள்கிறது. இருப்பினும், கேட்பதற்கு இனிமையான இசையையும் தந்தவண்ணம் இருக்கின்றனர் பலர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இசை ஒரு கலை, அது அவனவன் ரத்தத்தில் உயிரில் கலந்திருக்கவேண்டிய ஒன்று. இசைக்கருவிகளை தட்டும்போது எழுவதையெல்லாம் இசையாய் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நான். இசையை பற்றி பேச நீ யார், உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறீர்களா. இசையுடன் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இசையை ரசிப்பவனுக்கு அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு.

- தினேஷ்மாயா -

எது அழகு ?



     அழகு என்பது பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறதே தவிர, உருவ தோற்றத்தில் இல்லை. இன்றைய காலகட்டத்தில் அழகு என்றால், வெண்மையாக இருப்பது என்று பொருள் கொள்ளும் வண்ணம் மாறிகிடக்கிறது இந்த சமூகம்.

தகவல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாய் மாறிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் ஊடகங்கள் சொல்வதை வேத வாக்காக எண்ணி நடக்கின்றனர். ஊடகங்களில் சொல்வதை வெறும் காதில் மட்டும் கேட்டுவிட்டு, தன் மனதார சிந்தித்து செயல்படும் மக்கள் வெகு குறைவே. அப்படியிருக்க, ஊடகங்கள் தங்கள் வியாபாரத்திற்காக சமுகத்தில் பல தீய எண்ணங்களை விதைக்கின்றனர்.

     அழகு சாதனங்களை விற்பனை செய்ய, அழகு சாதனங்களை உபயோகிப்பவர்கள் மட்டுமே அழகாய் இருப்பர் என்பன போன்ற ஒரு மாயை நிலையை சமூகத்தில் விதைத்திருக்கின்றனர். என் தமிழ் பெண்கள், இயற்கையான பொருட்களை மறந்து, அழகு பொருட்கள் என்று சொல்லப்படுபவைகளையும், அழகு நிலையத்தையும் நாடி செல்லும் அவல நிலை அறங்கேறி வருகிறது. முகத்திற்கும் தேகத்திற்கும் மஞ்சள் பூசும் நிலை போய், Facial-ஐ நாடி செல்கின்றனர். மாதம் ஒருமுறையில் தொடங்கி வாரம் ஒருமுறை அதை செய்துக்கொள்ளும் அளவிற்கு அழகு என்கிற வார்த்தை பெண்களை பாடாய் படுத்துகிறது.
     வருத்தப்படும் விஷயம் இன்னொன்றும் இருக்கிறது. பெரும்பாலான ஆண்கள் அப்படியிருக்கும் பெண்களைத்தான் விரும்புகின்றனர் என்பதால் பெண்களும் அப்படியே இருக்க விரும்புகின்றனர். உண்மையான அழகு என்பது உள்ளத்தில்தான் இருக்கிறது என்பதை அனைவரும் எப்போது உணர போகின்றனர்.
                                
                                  
     சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை பார்த்தேன். நீங்கள் திரையில் காண்பது போல அவள் அழகொன்றுமில்லை. பார்வையற்ற ஒரு நபர் சில பூசை பொருட்களை தெருவில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவள் தன் தோழிகளுடன் சென்று அவரிடம் சில பொருட்களை வாங்கிவிட்டு என்னைக்கடந்து சென்றாள். அப்போது அவள் தோழிகள், எதுக்குடி இதை வாங்கின இதுதான் நம்மிடம் ஏற்கெனவே இருக்கே என்றனர். அதற்கு அவள், இது நம்மிடம் இருக்கு என்று எனக்கும் தெரியும், ஆனால் இவரிடம் எத்தனை பேர் பொருளை வாங்குவாங்க சொல்லு. எல்லோரும் பெரிய பெரிய ஷோரூம்களுக்கு சென்று பொருட்களை சொன்ன விலைக்கே வாங்கிவருவாங்க, இல்லைனா சிறிய கடைக்கு சென்று பேரம் பேசி வாங்குவாங்க. இதுபோல பார்வையற்றவர்கள் பிச்சை எடுக்காமல், சிறிதாய் மட்டுமே லாபம் கிடைத்தாலும் ஒரு தொழிலை செய்து வாழும்போது அவர்களை ஊக்குவிக்கனும் என்று சொன்னாள். அவள் என் கண்களுக்கு ரொம்பவே அழகாய் தெரிந்தாள். வெள்ளைத் தோளின் உள்ளே கறுப்பு மனம் படைத்தவளைவிட, கறுப்புத் தோளின் உள்ளே வெள்ளை மனம் படைத்தவளே என்னைப்பொறுத்தவரை உண்மையான அழகுடையவள், என்றும் அழியா அழகுடையவள்.

- தினேஷ்மாயா -

தமிழன்னை




கேட்காமலே என் தமிழன்னை

வார்த்தைகளை வாரி வாரி

கொடுக்க தயாராய் இருக்கும்போது,

ஆங்கிலத்திடம் ஏன் அனைவரும் சென்று

பிச்சை கேட்கின்றனர் ??


- தினேஷ்மாயா - 

பேதை

Saturday, January 26, 2013



பேதையை  ( பெண்ணை ), வெறும்

போதையாக மட்டுமே

பார்க்கும் உலகமடா இது..


- தினேஷ்மாயா -

வெற்றிக்கு பின்னால்



ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள்.
என் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பென் இருக்கு.
அது வேறொன்றுமில்லை.. அவள் வாங்கி கொடுத்த ஹீரோ பென்...

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அன்பு



நிபந்தனை ஏதுமின்றி அன்பை பிறர்க்கு கொடுப்பவனுக்கு,

நிரந்தரமான அன்பு நிறைய கிடைக்கும்..


- அன்புடன்
****தினேஷ்மாயா****

பொங்கலோ பொங்கல்...

Friday, January 25, 2013


    நம் இமயம் அறக்கட்டளையின் சார்பாக, திண்டுக்கல் அருகே இருக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில் இருக்கும் R.C. கருணை இல்லத்தில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினோம். 

     இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம், பொங்கல் வைத்து, உணவிற்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவித்து இயற்கைக்கு படைத்தோம்.

     கலை நிகழ்ச்சிகளும் நடத்தி, சில விளையாட்டு போட்டிகளும் நடத்தி அவர்களுடன் நாமும் விளையாடி மகிழ்ந்தோம்.

       உதவி புரிந்த நல்ல உள்ளங்களுக்கும்,
       வருகை புரிந்த அன்பு உள்ளங்களுக்கும், நம் இமயம் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இறைதூதன் ஏசு கிறிஸ்து..


வரவேற்புரை



நடன நிகழ்ச்சி




வருகை புரிந்த அன்பு உள்ளங்கள்..






பொங்கல் பானையை நடுவில் வைத்து கும்மி அடித்து நடனமாடினர்..





























பொங்கல் என்றால், கரும்பு இல்லாமலா??



பாட்டுக்கு பாட்டு விளையாடினோம்..





பொங்கலோ பொங்கல்...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

தெய்வம்



சிலர் தீ-யை வணங்குகின்றனர்

சிலர் திசையை வணங்குகின்றனர்

சிலர் சிலுவையை வணங்குகின்றனர்

சிலர் சிலையை வணங்குகின்றனர்

சிலர் மலையை வணங்குகின்றனர்

சிலர் மனிதனையே வணங்குகின்றனர்

பலர் மதத்தை வணங்குகின்றனர் !!!


எங்கே தெய்வம் என்பதை விடுங்கள்.
இதில் எது தெய்வம் ?? யார் தெய்வம் ??


- அன்புடன்

****தினேஷ்மாயா****

!!! இறைவன் ஒருவனே !!!



“ தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்”
- பாரதியார்


!!! இறைவன் ஒருவனே !!!

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அறிவே சிவம்



“ சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? “

- பாரதியார்


அன்பே சிவம் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.
ஆனால் நம் பாரதியோ,  அறிவே சிவம் என்கிறான்.



-அன்புடன்
****தினேஷ்மாயா****

பகுத்தறிவாளன்




  “கடவுள் இல்லை” என்று பேசுபவர்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிடமுடியாது. பகுத்தறிவு என்பதற்கு இன்னமும் பல அர்த்தங்கள் இருக்கிறது என்பதை பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்வோர்கள் உணர வேண்டும்..
- பாரதியின் கவிதைகளை படித்துவிட்டு என் மனதில் உதித்தது...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

இன உணர்வு



சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ - கிளியே !
செம்மை மறந்தா ரடீ !
பாரதி..

தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரியும் அனைவர்க்கும் செருப்பால் அடிக்காமல் தன் வரிகளால் அடித்து அன்றே சொல்லியிருக்கிறான் தமிழனின் இன உணர்வென்பது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே என்று...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

கேளடா மானிடவா



கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓருதரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

     -    மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்
 

- அன்புடன்
***** தினேஷ்மாயா****  

கண்ணுக்கு மை அழகு

Thursday, January 24, 2013


கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு

நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு

ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேரழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு அழகு
தலைவிக்கு நான் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார்கூந்தல் பெண் அழகு

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்
வரிகள்: வைரமுத்து

- அன்புடன்
****தினேஷ்மாயா****

இந்திரா.......


விடியாத இரவென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே……
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே……

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே……

அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளைய செல்லியே…
வாடி இளைய செல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா…
அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப் போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்

படம் : இந்திரா
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : அனுராதாஸ்ரீராம், G.V. பிரகாஷ், எஸ்தர், ஷா, சுஜாதா, ஸ்வேதா
வரிகள் : வைரமுத்து

****தினேஷ்மாயா****