பெண்ணுக்கு ஒரு நியாயமா?

Friday, November 08, 2013



        நானும் சமூக வலைத்தளங்களின் பல பதிவுகளில் பார்க்கிறேன். பெண்கள் மது அருந்துவதையும் மதுபான கடைகளில் இருப்பது போன்றதுமான படங்களை பலரும் உறக்க சொல்லி பெண்களை விமர்சிக்கின்றனர். இதுவே போதும் நாம் இருப்பது ஒரு ஆணாதிக்க சமூகம் என்பதை உணர்த்த. மது அருந்துவது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு என்றுதான் சொல்கிறார்களே தவிர ஆண்களுக்கு நல்லது பெண்களுக்கு மட்டும் கேடு என்று எவரும் சொல்வதில்லை. முதலில் பெண்கள் மது அருந்துவது தவறு ஆண்கள் மது அருந்தினால் சரி என்கிற பொய்யான தோற்றத்தை போக்கி, மது அதை அருந்தும் தனி நபருக்கு மட்டுமின்றி நம் சமூகத்துக்கும் கேடு என்பதை உணர்த்துவோம்.

* தினேஷ்மாயா *

0 Comments: