இந்தியா வளர்கிறது ஒளிர்கிறது மிளிர்கிறது என்றெல்லாம் வாய்கூசாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்களே, எதன் அடிப்படையில் இந்தியா வளர்கிறது என்று சொல்கிறார்கள் என்று நான் தெரிந்துக்கொள்ளலாமா ?
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களை மறந்துவிட்டு நகரங்களை மட்டும் வளரவிட்டால் அது வளர்ச்சி ஆகிவிடுமா ?
நகரத்திற்கு இணையான வசதிகளை கிராமங்களுக்கும் செய்து கொடுத்தால் அதுதான் சிறந்த வளர்ச்சி. அதைவிடுத்து, நகரங்களை மட்டுமே வளர்ப்பதால், கிராமத்தில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக நகரங்களுக்கு படையெடுப்பர். அப்படித்தான் இன்று சென்னையிலும் ஐதராபாத்திலும் மக்கள்தொகை அதிகமாய் உயர்ந்திருக்க காரணம். அடிப்படை வசதிகளையு உள்கட்டமைப்பையும் பலப்படுத்தினாலே கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வேலையை கிராமங்களிலேயே ஏற்படுத்திக்கொள்வார்கள். நகர வாழ்க்கைக்கு வரவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படாது.
நகரத்தில் கடந்த 7 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இந்த நகர வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. கிராமத்து வாழ்க்கைதான் எனக்கு பிடித்திருக்கிறது. இங்கே எவர்க்கும் மனிதனை மதிக்கக்கூட தெரியவில்லை. மனிதவளத்தை மேம்படுத்தாமல் மனிதவளத்தின் தேவையை நம் மக்களும் உணரவில்லை, அரசாங்கமும் உணரவில்லை.
என்ன செய்ய ! ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment