20 வயதில் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய 15 விஷயங்கள்
1. இந்த உலகம் நம்மை எப்போதும் முட்டாளாகவே இருக்கவைக்க முயற்சிக்கிறது.
2. தற்கால கல்விமுறை மீது அதீத நம்பிக்கை வைக்காதீர்கள். அது ஒருபோதும் உங்களை அறிவாளியாக்காது உங்களை பக்குவப்பட்டவனாய் ஆக்காது.
3. உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு புத்தகங்களை படியுங்கள். அதிகம் அறிவை புத்தகங்கள் கொடுக்கும்.
4. உங்கள் அருகில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, தொலைவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி. அனைவரோடும் தொடர்பில் இருங்கள்.
5. வெட்கப்பட்டுக்கொண்டு எந்த வேலையையும் செய்யாமல் இருக்காதீர்கள். காலம் பொன் போன்றது. கிடைக்கும் நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்துங்கள்.
6. பிடிக்காத விஷயத்தில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வர பாருங்கள்.
7. வயதில் மூத்தவர்களிடம் அதிகம் பேசுங்கள். அவர்களின் அனுபவங்களை அவர்கள் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளும்போது உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும், பல பிரச்சனைகளுக்கு வழிகள் மற்றும் தீர்வுகள் கிடைக்கும்.
8. உங்களைவிட அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பவர்களை தேடிப்பிடியுங்கள். அவர்களிடம் தொடர்ந்து நட்பில் இருங்கள். உங்களுக்கு இன்னமும் பொறுமையும் அமைதியும் அதிகரிக்கும்.
9. வயது கூட கூட நீங்களும் ஒரு பழமைவாதி ஆவீர்கள்.
10. உங்களால் இயன்ற அளவு, உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
11. பொருட்களை சேகரிக்க செலவு செய்வதைவிட அனுபவத்தை சேகரிக்க செலவு செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கைக்கான மூலதனம். நிறைய பயணம் செய்யுங்கள். அதிக அனுபவம் கிடைக்கும்.
12. பணத்தை சேமித்தாலே உங்கள் பணப்பிரச்சனைகள் அனைத்தும் ஓடிவிடும். சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
13. ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருங்கள்.
14. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
15. சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்கள் சுலபமாய் இருக்கும்.
நன்றி: இணையம். ஆங்கிலத்தில் இருந்த ஒரு தொகுப்பை என்னால் முடிந்தவரை தமிழில் கொடுத்திருக்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment