இதென்ன நியாயம்

Tuesday, November 12, 2013



      நான் ஏழாவது படிக்கும்போது என் தமிழாசிரியை நந்தினி அவர்கள், எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார். சில நாட்களுக்கு முன்னர் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்வை நினைத்துப்பார்த்தேன்.

    அப்போது தமிழ் வகுப்பு தொடங்கும் நேரம். ஆசிரியை இன்னமும் வரவில்லை. என்னுடன் பயிலும் தோழி ஒருத்தி, என் பேரை சொல்லி அழைத்து என் கணக்கு புத்தகத்தை கொடுடா என்றாள். அவள் என்னை “டா” சொல்லி அழைத்ததும் அப்போது எனக்கு கொஞ்சம் கோவம் வந்துவிட்டது. உடனே நான், தரமாட்டேன் போடி என்றேன். நான் சொன்ன நேரம், என் தமிழாசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் மிகவும் கணிவான, பொறுமையான ஆசிரியை. எதற்கும் கோபப்படமாட்டார். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். அவர் என்னை அழைத்தார். நானும் சென்றேன். நீ இப்ப என்ன சொன்ன என்று கேட்டார். இல்ல ஆசிரியை அவள் தான் முதலில் என்னை “டா” என்று சொன்னாள் என்றேன். அதற்கு அவர், பெண்கள் ஆண்களை “டா” போட்டு அழைத்தாலும் ஆண்கள் பெண்களை “டி” போட்டு அழைக்ககூடாது. ஒரு ஆண் தன் மனைவியை மட்டும்தான் அப்படி அழைக்கவேண்டும் என்று சொன்னார். 

   அந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது. அவர் சொன்ன அந்த அறிவுரை இன்றளவும் பின்பற்றுகிறேன். என்னைவிட வயதில் மூத்த பெண்கள் அல்லது என்னைவிட வயது குறைவான பெண்கள் இப்படி யாராக இருந்தாலும், அவர்கள் என்னை தெரிந்தோ தெரியாமலோ அல்லது உரிமையுடனோ “டா” என்று சொல்லி அழைத்தாலும் நான் அவர்களை “டி” என்று சொல்லி அழைத்ததில்லை. அவர்களை மட்டுமல்ல, இன்றுவரை என் தங்கையையும்கூட நான் அப்படி அழைத்ததில்லை. என்னுடன் பழகிய பெண் தோழிகளுக்கு இது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதுவரை அவளை மட்டுமே “டி” போட்டு உரிமையோடு அழைத்திருக்கிறேன்.

   என் தமிழாசிரியை சொன்ன இந்த அறிவுரையை இன்றுவரை பின்பற்றுகிறேன். அதை மீறாமல் இருந்தாலும், எனக்குள் ஒரு சிறு கேள்வி. இதென்ன நியாயம். ஆண்கள் அப்படி அழைக்க கூடாது, பெண்கள் அப்படி அழைக்கலாம் என்று சொல்வது. 

( இதுதான் பெண்ணாதிக்க சமுதாயம் என்பதோ ? - சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் )

* தினேஷ்மாயா *

0 Comments: