பேய் பிடிச்சிருக்காம்

Tuesday, November 12, 2013


     நீண்ட நாட்கள் கழித்து என் நண்பன் ஒருவனை வழியில் சந்தித்தேன். நேரம் செல்வதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நேரம் அதிகமாகிவிட்டதால், என் வீட்டுக்கு வந்து உறங்க அழைத்தேன். அவனோ, சிறு பதட்டத்துடன், இல்ல  மச்சி என் அண்ணாவுக்கு பேய் பிடிச்சிருக்காம். நான் வெளியில் யார் வீட்டிலும் தங்க வேண்டாம்னு என் அம்மா சொல்லிட்டாங்க என்றான். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை. 

 அவன் சென்றபிறகு, அவன் சொன்னதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். இன்னமும் எத்தனை நாட்கள்தான் இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இறந்தபின்னர் ஒருவர் எங்கு செல்கிறார் என்று எவர்க்கும் தெரியாதபோது அவரின் ஆன்மா மற்றொருவரின் உடலில் சென்று அவரை கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியமாகும். ஒரு உடலுக்கும் இரண்டு உயிர் எப்படி ?

     இறந்த ஒருவர் தன் ஆசைகளை பூர்த்திசெய்துக்கொள்ள பிறரின் உடலில் செல்கிறார் என்று பலவாறு காரணம் கூறப்பட்டாலும், என் சிந்தையில் எழுகின்ற ஒரு கேள்வி இதுதான். அன்னை தெரசா அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தீராத எண்ணமாக இருந்தது. அவர் இறந்த பிறகு ஏன் அவர் இன்னொருவர் உடலில் வந்து சேவை செய்யவில்லை? 

   ஐன்ஸ்டீன் ஏன் இன்னொருவர் உடலில் மீண்டும் வந்து இன்னும் பல கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிகழ்த்தவில்லை? ஏன் மீண்டும் பாரதியார், பெரியார், காரல் மார்க்ஸ், பகத்சிங், அம்பேத்கர், காமராஜ் இப்படி சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட எவரும் பிறரின் உடலில் வந்து தங்கள் சேவையை தொடரவில்லை ?

   எல்லாவற்றுக்கும் இவர்களே ஒரு காரணம் சொல்வார்கள். அந்த காரணம் உண்மை என்று இவர்களே நம்புவார்கள். என்ன கொடுமை சார் இது ?

   சரி நான் வேற வீட்டுல தனியா இருக்கேன். மணி 11 ஆச்சு. அங்க ஏதோ சத்தம் கேட்குது. கொஞ்சம் இருங்க, என்னனு பாட்துட்டு வந்துடறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: