காஃபி பைட்..

Saturday, November 30, 2013


    நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது இரவில் அதிகநேரம் கண்விழித்து படிக்க வேண்டி இருந்தது. ஆனால் தூக்கத்தை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. என்னவளுக்கு இரவில் வெகுநேரம் படிப்பது சாதாரண விஷயமாக இருந்தது. நான் எனக்கு இருக்கும் கஷ்டத்தை சொன்னபோது என்னவள் எனக்கு சொன்ன யோசனைதான் இந்த காஃபி பைட். இரவில் தூக்கம் வரும்போதெல்லாம் ஒரு காஃபி பைட் சாப்பிட்டுக்கொண்டே படித்தால் தூக்கம் வராது. அதேபோல இரவில் அதிக நேரம் கண்விழித்ததால் தேர்வு அறையில் தூக்கம் வர வாய்ப்பிருக்கும்,தேர்வு அறையிலும் 3 மணி நேர தேர்விற்கு 4 முறை சீரான இடைவெளிவிட்டு காஃபி பைட் சாப்பிட்டால், தூக்கமும் வராது, நம் மூளையும் சுறுசுறுப்பாய் இருக்கும் படித்த அனைத்தும் நினைவில் இருக்கும் நாமும் நிறைய கேள்விகளுக்கு சரியாக விடையளிக்கலாம் என்றாள். அவள் சொன்ன அனைத்தையும் சரியாக கடைபிடித்தேன். அதனால் என் தேர்வில் சிறப்பாக மதிப்பெண்ணும் கிடைத்தது. இதை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லியிருக்கிறேன்.

  இன்று வரும்வழியில் காஃபி பைட் மிட்டாயை பார்த்தேன். அவள் நினைவு வந்துவிட்டது. அதான் இங்கே என் நினைவுகளை இறக்கிவைத்துவிட்டு செல்லலாம் என்று வந்தேன்...

* தினேஷ்மாயா *

0 Comments: