அறிவுரை

Monday, November 11, 2013



   அறிவுரை சொல்லி மக்களை திருத்தலாம் என்பதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் யார் சொல்லும் அறிவுரையையும் யாரும் கேட்பதில்லை. கேட்டாலும் அதன்படி நடப்பதில்லை. பிறர் நன்மைக்காக அறிவுரை சொல்லி அதிகம் அசிங்கப்பட்டிடுக்கிறேன். 

  “உனக்கென்னப்பா.. நீ பேசுவ.. ஆனா எனக்கு அப்படியா இருக்கு சூழ்நிலை” என்பார்கள். 

  “எல்லாம் எனக்கு தெரியும். நீ சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை” என்பார்கள்.

   “நான் என்ன சின்னபிள்ளையா. இதுகூட எனக்கு தெரியாதா. நான் பாத்துக்குவேன்” என்பார்கள்.

   இதெல்லாத்தையும்விட “நான் உன்னிடம் அறிவுரை கேட்டேனா?” என்பார்கள்.

பிறர் தவறான வழியில் செல்வதை அதுவும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு அதிகம் வேண்டியவர்கள் தவறான வழியில் செல்வதையோ அல்லது தவறான முடிவு எடுப்பதையோ என்னால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. பலமுறை பலருக்கு அறிவுரை என்கிற பெயரில் நல்வழியை எடுத்து சொல்வேன் அவர்கள் எடுத்திருக்கும் முடிவில் இருக்கும் தவறையும் சுட்டிக் காட்டுவேன். ஆனால் ஒருவரும் செவிகொடுத்து என் வார்த்தைகளை கேட்டதில்லை. சிலர் கேட்டிருக்கிறார்கள். பலர் தங்கள் வாழ்க்கைக்கான முடிவை தாங்களே எடுக்கிறோம் என்று இருந்து விடுவார்கள்.

   நம் வாழ்க்கை என்பது நம்முடையதுதான் ஆனால், உங்கள் வாழ்க்கையை உங்களால் மட்டும் தனியாய் வாழ்ந்துவிட முடியாது. சமூகத்தை சார்ந்துதான் நான் வாழ்ந்தாக வேண்டும். சமூகத்தில் கிடைக்கும் அனுபவங்களை நம் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பிறரின் அறிவுரைகளை நடைமுறைப்படுத்தாவிடினும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு அது எப்போதாவது உபயோகமாய் இருக்கக்கூடும்.

* தினேஷ்மாயா *

0 Comments: