அந்த காலத்தில் எல்லாம் சொல்வார்கள், பெண் தலைக்குனிந்து நடந்தால் அழகு, ஆண் தலைநிமிர்ந்து நடந்தால் அழகு என்று. ஆனால் இன்று இருக்கும் நிலை முற்றிலும் மாறுப்பட்டது. இப்போதெல்லாம் செல்போன் வந்துவிட்டது. அதைவிட மெசேஜ் என்றொரு புதிய வசதி இருக்கிறது. ஆண் என்றாலும் பெண் என்றாலும் கொஞ்சம்கூட வேறுபாடு இல்லாமல் மெசேஜ் கலாச்சாரம் அனைவரிடத்திலும் பரவிக்கிடக்கிறது. தலைக்குனிந்து நடப்பதே இப்போது பேஷன் ஆகிவிட்டது. எப்ப பார்த்தாலும் செல்லில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பவர்கள் பலர். காலேஜ் படிக்கும் பசங்கதான் இப்படி என்று பார்த்தால் இவர்களையும் மிஞ்சும் விதத்தில் பள்ளி மாணவர்கள் செல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இப்போதுதான் TRAI ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறது. ஒரு நாளுக்கு 100 மெசேஜ் மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று. இது ஒரு வகையில் வரவேற்ககூடிய விஷயம். ஆனால் இதற்கு பலர் பலவிதமாய் எதிர்ப்புகுரல் எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். நாட்டின் அமைதியை கெடுப்பதற்கு தீவிரவாதிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கையை நான் பெரிதும் பாராட்டுவேன். இதனால் என் வருங்கால இந்தியாவான இந்நாள் இளைஞர்கள் தலைகுனிந்து நடப்பது கொஞ்சமாவது குறைந்திருக்கிறதே.
நண்பர்களோடு இருக்கையிலும் சரி, வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கையிலும் சரி, ஒரு மெசேஜ் வந்தால் போதும். உடனே இவர்கள் கவனம் முழுதும் அந்த செல் மீதேதான் இருக்கும். யாராவது எதையாச்சும் பேசிட்டு இருந்தாகூட அதை கவனிப்பது போல் தலையை ஆட்டிக்கொண்டு கவனம் முழுதும் மெசேஜ் அனுப்புவதிலேயே குறியாய் இருப்பர். இதில் நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் உங்கள் செயல் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. தலைக்குனிந்து நடக்கும் கலாச்சாரத்தை விட்டுவிட்டு தலை நிமிர்ந்து நடக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள் அன்பர்களே..
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
4 Comments:
Do you have any solution to this problem
நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு இருக்கு நண்பா..
எதாச்சும் ஒரு கால் கட்டர் பேக் போட்டுக்கொண்டு மெசேஜ் அனுப்புவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் ஒரு 5 நிமிஷம் பேசிவிட்டாள் நம் வேலையும் ஓவர், அவங்க வேலையும் ஓவர். மெசேஜ்னா, சாப்பிட்டியா, என்ன சாப்பிட்ட, எப்போ சாப்பிட்ட, எவ்ளோ சாப்பிட்ட, என்ன விட்டு சாப்பிட்டுட்ட இல்ல போ, சாப்பாடு எப்படி இருந்துச்சு, நல்லா இருந்துச்சா, நல்லா இருந்துச்சுனா ரொம்ப நல்லா இருந்துச்சா இல்ல கொஞ்சம்தான் நல்லா இருந்துச்சா, நீ மட்டும்தான் சாப்பிட்டியா இல்லை நண்பர்கள் யாராச்சும்கூட சாப்பிட்டியா... சாப்பிட்டியானு கேட்காமல் இப்படி பல மெசேஜ்கள் அனுப்பி நம் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் வீணாக்குகிறோம். பதிலாக, எந்த விஷயமானாலும் ஒரு போன் செஞ்சு பேசிட்டா அந்த விஷயம் அப்பவே முடிஞ்சிடும். நாமும் நம் வேலையை பார்க்கலாம், தலை நிமிர்ந்தும் நடக்கலாம்....
சரிதானே நண்பா....
ethu ellarukkum porunthuma, Sometimes it helps to improve our communition. Sometimes it is very useful to busy person
Nanum Msg use senchutu than iruken. Naan solvathu nam nerathai veenaakum sila nerangalil mattume thavira ella nerangalilum. sila nerangalil caal senchu pesuvathai vida msg seivathu siranthathu. nerathirku yetha mathiri nadanthukalame...
Post a Comment