பயம்

Friday, October 14, 2011



பயம்
     நம்மில் யாருக்கு பயம் இல்லை சொல்லுங்க. நான் எப்போதும் பயந்ததே இல்லை என்று யாராச்சும் சொல்ல முடியுமா. ஒரு உண்மையான வீரன் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட பயந்ததே இல்லை என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும். காரணம், உண்மையான வீரன் என்பவன் பயப்படாதவன் அல்ல, தன் பயத்தை வெளிப்பத்தாமல் இருப்பவந்தான். நம் சமூகம் நம்மை பயமுறுத்தியே வளர்த்துவந்தது என்பேன். சிறு வயதில் பூச்சாண்டி வருவான் நீ சாப்பிடலைனா அவன்கிட்ட பிடிச்சு குடுத்துடுவேன் என்பதில் ஆரம்பிச்சு, பொய் சொன்னா சாமி கண்ணை குத்திடும், வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுனு நாம் விளையாடப்போகும்போது சொல்வாங்க, இன்னும் பல விஷயங்களில் நம்மை சின்ன வயசிலேயே பயமுறுத்தி வளர்த்தாங்க. அதுபோன்ற விஷயங்களுக்கு நாம் இப்போது பயப்படுவதில்லை என்றாலும் அதன் அடிவேர் பயம் நம் உயிரோடு கலந்துவிட்ட ஒன்று. பயப்படும் சுபாவம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொரு விஷயத்திற்காக பயப்படுவோம். இளவயசில் அப்பாவை பார்த்தால் பயம், பள்ளியில் கையில் பெரிய குச்சியுடன் வரும் தலைமையாசிரியரை கண்டால் பயம், காதலியின் அண்ணனை பார்த்தால் பயம், கடனை கேட்க கடன் கொடுத்தவன் வந்தால் பயம், பரிட்சையில் தேரமாட்டோமோ என்று பயம், காதலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம், இப்படி பயங்கள் நிறைய இருக்கு. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இங்கு பெரும்பாலான பெண்களுக்கு கரைப்பான் பூச்சியை பார்த்தாலும் பயம்.
     பயம் ஏன் வருகிறது என்று எப்போவாச்சும் யோசிச்சு பார்த்திருக்கிறோமா. பயம் எப்ப வரும் தெரியுமா. ஒருவிஷயம் உங்களுக்கு தெரியாமல் இருக்கும்போதுதான் பயம் வரும். உதாரணமாக மேடையில் யாராச்சும் உங்களை பேச சொன்னால் உடனே பயம் வரும். அதுவே உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் என்றாலோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்தான் அங்கே இருக்கிறார்கள் என்றாலோ பயம் இருக்காது. இரவில் ஒரு உருவத்தை கண்டு பயப்படுகிறோம். ஆனால் உடனே அது யார் என்று அருகில் சென்று பார்த்தால் அது உங்கள் நண்பன் என்று தெரிந்ததும் பயம் போய்விடுகிறது. பயத்திற்கு அடிப்படையான காரணம் இதுதான். ஒரு விஷயம் தெரியாமல் இருப்பதே காரணம். அந்த விஷயம் தெரிந்தால் பயம் என்பது கண்டிப்பாக இருக்காது. சண்டை என்றால் நல்ல உடல்வாகு கொண்டவன்கூட அஞ்சுவான். காரணம் என்னவென்றால், அவனுடன் மோதுபவன் எப்படி இருப்பானோ என்று இவனுக்கு தெரியாது. காதலில் பயம் வரக்காரணம் அவள் இவனை காதலிக்கிறாளா இல்லையா என்று இவனுக்கு தெரியாது. இன்னும் எடுத்துக்காட்டுக்களை அள்ளி வீசிக்கொண்டே போகலாம்.
     நான் இதனால் சொல்ல வருவது பெரிசா ஒன்னும் இல்லை. எதுக்கும் பயப்படாதீங்க, பயம் ஏன் வருதுனு தெரிஞ்சுகிட்டு இருப்பீங்க. எந்த விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கோங்க, பயம் என்பது கண்டிப்பாக இருக்காது..
இப்படிக்கு பயம் அறியான் J



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: