நான் ஓட்டுப்போட மாட்டேன்…

Wednesday, October 19, 2011




நான் ஓட்டுப்போட மாட்டேன்…
     எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததிலிருந்து இதுவரை நடந்த தேர்தலிலும் நான் ஓட்டுப்போடவில்லை. இனி நடக்கப்போகும் எந்த தேர்தலிலும் நான் ஓட்டுப்போட மாட்டேன். ஒரு சிலர் என்னிடம் கேட்டார்கள். ஏம்பா நீ படிச்சவன் தானே நீயே இப்படி செய்யலாமா, ஓட்டுப்போடுவது நம் ஜனநாயக உரிமை அதை நீ இப்படி மறுக்கலாமா என்று. நான் சொன்னேன், ஐயா, ஓட்டுப்போடுவது நம் ஜனநாயக உரிமையாக இருக்கலாம், ஆனால் நாம் இருப்பது ஜனநாயக நாடில்லையே. இந்தியா ஜனநாயகம் என்னும் தகுதியை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தேர்தலில் நிற்கும் எந்த வேட்பாளர் உண்மையாக மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சொல்லுங்கள். தனக்கு ஓட்டுப்போட மக்களுக்கு காசு தராத வேட்பாளர் யாராச்சும் இருக்காங்களா. நான் பதவிக்கு வந்தால் இது செய்வேன் அது செய்வேன் என்று வாய்வலிக்க பேசுவோர்தான் இங்கே அதிகம். செயலில் செய்வோர் மிகவும் குறைவு. நான் ஓட்டுப்போட்டு தவறான மற்றும் தகுதியே இல்லாத ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கு பதிலாக, நான் ஓட்டுப்போடாமலே இருந்துவிடுவேன். அதை நான் எழுதித்தர 49-O  என்று ஒரு படிவம் இருக்கிறது. அதையும் நான் எழுதித்தர மாட்டேன். காரணம், நாம் யாருக்கு நம் வாக்கை பதிவு செய்கிறோம் என்று எவருக்கும் தெரியாமல் இருப்பதே நம் தேர்தல் முறையின் சிறப்பு. ஆனால், நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பது நான் அந்த படிவத்தை நிரப்பும்போதே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. என் வாக்கை வெளிப்படையாக நான் தெரிவிப்பதுதான் நான் இந்த ஜனநாயகத்திற்கு செய்யும் உண்மையான துரோகம். அதைவிட நான் யாருக்கும் என் வாக்கை பதிவு செய்யாமலே இருந்துவிடுவேன். முதலில் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அழித்துவிட்டு, அடையாள அட்டை இல்லாதவர்களு புதிய அட்டையை வழங்கிவிட்டு பின்னர் எந்த தேர்தலையும் நடத்துங்கள். அப்போது காலை 7 மணிக்கு வரிசையில் முதலில் வந்து நின்று வாக்களிப்பது நானாகத்தான் இருப்பேன்..
வாழ்க இந்தியா…. ஆனால் ஒழிக இப்போது இருக்கும் அரசியல் நடைமுறை..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: