நாட்டின் தலைவிதி..

Saturday, October 08, 2011




நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது
இன்றைய குழந்தைகள்தான் நாளைய இளைஞர்கள்.. நாளைய இளைஞர்கள் தான் நம் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டு செல்லப்போகும் நம்பிக்கை தூண்கள். இதற்கெல்லாம் முழுமுதலாக நாம் போற்றி வளர்க்க வேண்டியது இன்றைய குழந்தைகளை. இன்றைய குழந்தைகளை நாம் பள்ளிப்பருவத்திலேயே நல்வழிப்படுத்தினால் நம் நாடு நல்ல நிலையில் இருக்கும். நாட்டை வழிநடத்தி செல்லப்போகும் நாளைய இளைஞர்களாகிய இன்றைய குழந்தைகளை பேணிக்காப்பது ஆசிரியர்களாகிய நமது கடமை. பேணிக்காப்பது என்றால் அவர்களுக்கு நற்குணங்களை எடுத்துக்கூறி அதன்வழி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நாம் வழிவகுத்து தரவேண்டும். அதோடு அவர்களின் வாழ்க்கையை நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டியது அவர்தம் கடமை என்பதையும் நாம் இந்த வயஹ்டிலேயே அவர்களுக்கு உணரவைக்க வேண்டும். நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. நாட்டின் தலைவிதி மட்டுமல்ல அனைத்து மனிதனின் தலைவிதியும் அவர்களின் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது..

என் தங்கை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் வகுப்பில் பேச்சுப்போட்டியில் பேச இந்த தலைப்பைகொடுத்து என்னை எதாச்சும் எழுதித்தர சொன்னாள். எதோ அந்த நொடியில் மனதில் தோன்றியதை எழுதினேன். அதை இங்கே பதிவு செய்கிறேன்..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: