டவல்..

Monday, October 10, 2011




என் நண்பன் என்னிடம் விளையாட்டாய் கேட்டான். என்ன மச்சி எப்ப பாத்தாலும் Blog-ல எதாச்சும் எழுதிட்டே இருக்க. எனக்கும் கொஞ்சம் சொல்லி தரலாமேடானு கேட்டான். நான் அவனிடம் சொன்னேன், நீயும் எழுதுடா. சொல்லித்தர இதில் எதுமே இல்லடா. ஆனால் அவன் சொன்னான், இல்ல மச்சி எனக்கு உன்னை மாதிரி கவிதை எழுத தெரியாது, கதை கட்டுரை எல்லாம் எழுத வராது மச்சினு சொன்னான். அவன் அப்போ முகம் கழுவிவிட்டு டவல் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான். 

அப்போ நான் அவனிடம் சொன்னேன். மச்சி கவிதை கதை கட்டுரை எல்லாம் சொல்லி கொடுத்தா வராதுடா. என் மனசுக்கு தோன்றும் விஷயத்தை எழுதரேன்டா. அதை மத்தவங்க கொஞ்சமாச்சும் ரசிச்சு படிக்கிற மாதிரி எழுதரேன் அவ்ளோதாண்டானு சொன்னேன். எடுத்துக்காட்டுக்கு, இதோ உன் கையில டவல் இருக்கு. இதைபத்தி கூட எழுதலாம் மச்சி..

இந்த டவலை எதுக்கெல்லாம் மக்கள் பயன்படுத்தறாங்கனு சொல்லட்டுமா..

  • இதோ நீ முகம் கழுவிட்டு துடைக்க பயன்படுத்துர.
  • சிலர் குளித்துமுடிச்சுட்டு துண்டாக டவலை கட்டிப்பாங்க..
  • பேருந்தில் ஜன்னலோரத்தில் இடம் பிடிக்க..
  • வெயில் அடிச்சா தலையில் போட்டுக்க..
  • யாராச்சும் நெருக்கமானவங்க இறந்துட்டா அப்பவும் தலையில் போட்டுக்க...
  • கீழ போட்டு உட்கார..
  • ரேஷன் கடையில் அரிசி வாங்கிட்டு சக்கரை வாங்க பை இல்லாத போது தற்காலிக பையாக டவலை பயன்படுத்துறாங்க..
  • எதையாச்சும் சுத்தம் செய்ய..
  • சாப்பிட்டுவிட்டு கை துடைக்க..
  • நம்ம நாட்டாமை அப்புறம் பெரிய மனுஷங்க எல்லாம் தங்கள் தோளில் போட்டுக்க..
  • யாராச்சும் பெரிய ஆளுங்க போலிஸ்ல மாட்டிகிட்டா ஊடகங்களில் தங்கள் முகம் தெரியாமல் முகத்தை மறைக்க..
  • விளையாடி முடிச்சுட்டு வந்தா வியர்வையை துடைக்க..
  • விவசாயிகள் தங்கள் தலையில் தலைப்பாகை கட்ட..
  • சந்தையில் மாடு வாங்கும்போது துண்டு போட்டு அதற்குள் கையை விட்டுத்தான் வியாபாரம் செய்வார்கள்..
  • வீட்டுக்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் கண்டிப்பாக ஒரு டவலை வீட்டு பெரியவருக்கு போத்துவார்..
  • Retirement நிகழ்ச்சியில் அல்லது எதாச்சும் நிகழ்ச்சிகளில் யாரையாச்சும் சிறப்பிக்க..
  • கோமனமாய் கட்ட..
  • முடிவெட்டும்போது தோளில் போட..
  • கூலி வேலை செய்பவர்கள் எப்பவும் தங்கள் தோலில் ஒரு டவல் வெச்சு இருப்பாங்க..

    இன்னும் இப்படி பல பல விஷயங்களுக்கு பயன்படுத்துறாங்க நம் மக்கள்..

    நான் இங்கே டவல் என்று குறிப்பிடுவது எதாச்சும் ஒரு துணியைதான்.. நான் ஏன் இதை இங்கே எழுதறேன்னா, என் நண்பனிடம் கொஞ்சம் விளையாட்டாஇ பேசியதைதான் இங்கே பதிவு செய்திருக்கிறேன்..
வலைப்பக்கத்தை எழுத கவிதை நயமோ கதை எழுதும் திறமையோ முக்கியம் இல்லை. உங்கள் மனசை தொடும் விஷயம் எதுவானாலும் எழுதுங்கள், அதை மற்றவர் கொஞ்சம் ரசிச்சு படிக்கிற மாதிரி எழுதுங்கள் போதும்... இது தாங்க என் கருத்து.. நான் சொல்றது சரிதானே வாசகர்களே..



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: