மிஸ்டு கால்
செல்போனை கண்டுபிடிச்சது வெளிநாட்டவர் என்றால்,
மிஸ்டுகாலை கண்டுபிடிச்சது நம் இந்தியர்கள்தான் என்று சொல்லலாம். சரி அதைவிடுங்க. நான்
சொல்ல வந்ததே வேற. இப்ப நம்ம செல்போனை காணோம்னு வெச்சுக்குங்க, உடனே என்ன செய்வோம்
சொல்லுங்க. நம் நண்பர்கள் இல்ல அப்பா அம்மா போனை எடுத்து நம்ம போனுக்கு ஒரு மிஸ்டுகால்
கொடுப்போம் இல்லையா. இது நமக்கு பழக்காம ஒரு விஷயம்தான். ஆனால் இதை நமது மூளை எப்படி
பயன்படுத்துகிறது தெரியுமா. எதாச்சும் ஒரு பொருள் காணோம்னா எடுத்துகாட்டா சொல்லனும்னா
நம்ம மூக்கு கண்ணாடி , கைக்கடிகாரம், டி.வி. ரிமோட், சீப்பு, பேனா இப்படி எதை மறந்துவிட்டு
தேடினாலும் நம் மூளை உடனே அதற்கு ஒரு மிஸ்டுகால் தரத்தான் சொல்லும். அந்த அளவிற்கு
மிஸ்டுகால் கொடுத்து ஒரு பொருளைத்தேடுவது என்பது நம் மூளையில் நன்றாக பதிந்துவிட்டது.
இதுவும் ஒரு சுகமான அனுபவம்தான் இல்ல..
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment