நான் செத்துடப்போறேன்.
உலகில் கவலைகள் இல்லாத மனிதன் யாராச்சும் இருக்காங்களா.
வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியை மட்டுமே எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா.
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. மனதை அதிகம் காயப்படுத்தும் நிகழ்வுகள்
பல நடந்திருக்கலாம், நடந்துக் கொண்டிருக்கலாம், நடக்கலாம். பலர் வெளிப்படையாக தங்கள்
கவலைகளை மற்றவரிடம் சொல்லிவிடுவார்கள். இன்னும் சிலர் தங்கள் கவலைகளை உள்ளேயே வைத்துக்கொண்டு
மனதையும் உடலையும் காயப்படுத்திப்பார்கள். அதுபோன்றோரிடம் தற்கொலை எண்ணம் அதிகம் தலைத்தூக்கும்.
அவர்கள் தங்களுக்கு அதிகம் நெருக்கமாக இருப்பவரிடம் “நான் செத்துடப்போறேன்” என்று சொல்வார்கள்…
எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர் என்னிடம் இப்படி
சொன்னார். நான் அவரிடம் சொன்னதை அப்படியே இங்கே உங்களிடம் சொல்கிறேன். செத்துடறேன்னு
எப்பவும் சொல்லாதீங்க. செத்துடறேன்னு சொல்றவங்க அதை செய்யமாட்டாங்க. அதைவிட, அவங்க
தங்களோட உயிரின் மதிப்பையும் ஒரு உயிரின் மதிப்பையும் பற்றி தெரியாமல் பேசுறாங்க. இப்படி
சொன்னால் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான ஒருத்தர் இறக்க நேரிடும். ஏன்னு கேட்டீங்கன்னா
கடவுள் உங்களுக்கு ஒரு உயிரின் அருமையையும் அதன் உன்னதமான மதிப்பையும் உங்களுக்கு புரியவைக்க
உங்களுக்கு சொந்தமான ஒருவர் உயிரை இழக்க நேரிடும். அதனால எப்பவும் இந்த மாதிரி சொல்லாதீங்க.
எந்த கஷ்டம் வந்தாலும் சரி, துணிஞ்சு நில்லுங்க. நீங்க செத்துட்டா மட்டும் இந்த கஷ்டம்
முடிஞ்டுடாது. எதையும் எதிர்த்து நிக்கனும்னு சொன்னேன். நான் சொன்னது அவருக்கு என்ன
புரிஞ்சதுனு தெரியலை. ஆனா அவர் அந்த மாதிரியான நினைவில் இருந்து உடனே விடுபட்டுவிட்டார்.
இனி உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கோ இப்படி ஒரு நினைவு வந்துச்சுனா
கொன்னுடுவேன்…
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
1 Comments:
superb mayaaaaaaaaa..
Post a Comment