50 பைசா…
50
பைசா என்பது மிகவும் சிறிய தொகை என்று நம்மில் பலர் அதை பல நேரங்களில் கண்டுக்கொள்வதே
இல்லை. பொதுவாக பேருந்தில் நடத்துனர் 4.50 டிக்கெட்டிற்கு 5 ரூபாயை வாங்கிக்கொண்டு
மீதி 50 பைசாவை தராமல் இருந்தால் நம்மில் பெரும்பாலானோர் அதை அவரிடம் கேட்பதில்லை.
அதை கேட்பது நம் இமேஜை குறைத்துக்கொள்வதுபோல நம்மில் பலர் நினைப்போம். ஆனால் ஒருசிலர்தான்
மீதத்தொகையை திருப்பி கேட்கிறோம். நம் பணத்தை நாம் கேட்க ஏன் இவ்வளவு தயக்கம். அது
50 பைசா என்பதால் தானே இவ்வளவு தயக்கம். அதுவே 5 ரூபாயாக இருந்தால் நீங்கள் இப்படி
அமைதியாய் இருப்பீர்களா. பல நேரங்களில் நடத்துனர் மீதத்தொகையை அதுவும் குறிப்பாக அந்த
50 பைசாவை இறங்கும்போது தருவதாக சொல்வார் அல்லது இறங்கும்போது கேட்டு வாங்கிக்க சொல்வார்.
இறங்கும்போது பணம் தருகிறேன் இப்போது டிக்கெட் தாங்க என்று நாம் கேட்டால் அவர் அதை
ஏற்பாரா..
இன்னும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்,
மளிகைக்கடைகளில் 50 பைசா தருவதற்கு பதிலாக ஏதாச்சும் மிட்டாயை தருவார்கள். நான் அதே
50 பைசாவிற்கு பதிலாக ஒரு மிட்டாயை கொடுத்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
ஏன் இவன் இந்த 50 பைசாவிற்காக இவ்வளவு பேசுகிறான்
என்று கேட்கிறீர்களா. நான் இங்கே பேசிக்கொண்டிருக்கும் தொகை வேண்டுமானால் சிறியதாக
இருக்கலாம் ஆனால் அதை கையாளும் மனிதர்களின் செயல்பாடுகள் என்றும் மாறாது. 50 பைசாவாக
ஒவ்வொருவரிடம் இப்படி இவர்கள் தராமல் இருந்தால் அது எவ்வளவு பெரிய தொகையாக உருவாகும்
தெரியுமா. I am not talking about
the money. But I am talking about their
Attitude…
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment