இவையனைத்தும் என்னவளுக்கு சமர்ப்பணம்

Monday, August 23, 2010




இவையனைத்தும் என்னவளுக்கு சமர்ப்பணம்
ரோஜா –
உன் கூந்தல்
ஏறவே இன்று
புதிதாய் மலர்ந்தது…

கவிதை –
உனை வர்ணிக்கவே
முன்னோர்கள் கற்றுத்தந்த
ரசனை பாடம்…

மழை –
உன் ஸ்பரிசத்திற்காகவே
ஏங்கிய குடையின்
தவிப்பை போக்க…

பேருந்து –
வீட்டிலிருக்கும் உனை
என் கண்மும்
கொண்டுவந்து சேர்க்க…

சீப்பு –
உன் கூந்தல்முடியை
உதிர வைக்க, அதை
நான் பத்திரப்படுத்த…

மெத்தை –
உனை வீட்டில்
உறங்க வைத்து
என்கனவில் காட்ட…

காலணி –
ரோஜா இதழ்கள்
வருடி உன்கால்
வலிக்காமல் இருக்க…

கொலுசு –
உன் வருகையை
தொலைவில் இருந்தே
எனக்கு உணர்த்த…

துப்பட்டா –
உனை கடந்துசெல்கையில்
காற்றில் பறந்து
எனைஉரசி செல்ல…

நூலகம் –
புத்தகம் தேடுவதுபோல்
உனையே எப்போதும்
சுற்றிசுற்றி வர…

வகுப்பறை –
ஆசிரியர் என்னையும் ( கோபமாய் )
நான் உன்னையும் ( காதலாய் )
பார்த்து கொண்டிருக்க…

மிதிவண்டி –
தேவதை நீ வாங்கியதால்
அப்பாவிடம் அடம்பிடித்து
நானும் வாங்கியது…

Mysore Sandal Soap –
என்னை தவிர
இதற்குமட்டுமே உன்னுடலை
தொடும் உரிமை…

ஓரப்பார்வை –
நீயும் எனை
நேசிக்கிறாய் என்பதை
எனக்கு உணர்த்த…

உன் கண்கள் –
உனக்காகவே வாழும்
என் உயிரை
ஈர்த்து கொள்ள…

Physics lab –

Class First  - நீ

உன்னிடம் சந்தேகம்

கேட்பதுபோல் உன்னுடன் பேச…

Class Test

என்னருகில் நீ அமர்ந்தால்

உன்னையே பார்த்துக்கொண்டு

ஆசிரியரிடம் வசமாய் மாட்ட


Free Period –

நீ அடிக்கும் அரட்டையை

எவர்க்கும் தெரியாமல்

ரகசியமாய் நான் ரசிக்க…


Fair & Lovely –

உன் பொன்னிறம்போல்

நானும் என்னை

மாற்றி கொள்ள…


Scale, Pencil –

என்னிடம் இருந்தாலும்

உன்விரலை தீண்ட

உன்னிடம் கடன் கேட்க…


Last Period –

எல்லோரும் பள்ளிக்கூடம் முடிய

காத்திருக்க, நான்மட்டும்

கூடாதென்று ஏங்க…




அன்புடன் -
தினேஷ்மாயா 

1 Comments:

தினேஷ்மாயா said...

மூன்று வருடங்களாயிற்று இந்த கவிதையை எழுதி. இன்று அவள் என் வாழ்வில் இல்லையென்றாலும், இந்த கவிதையை நீண்ட இடைவெளிக்குப்பிறகு படிக்கும்போது என்னுள் இருக்கும் காதல் மெல்லியதாய் என்னுள்ளேயே சிரித்துக்கொள்கிறது..

- காதலுடன் -
தினேஷ்மாயா