S - K.Srinivasan
S - S.Sangeetha
S - V.Saranya
S - V.Saranya
A - A.B.Arthy
D - M.Dhinesh Kumar
I - M.Indhu
K - D.Karthika
U - T.Uma Maheshwari
V - C.VasanthaKumar
4SADIKUV – இது எங்கள் Group –ன் பெயர். +2 படிக்கும்போது நாங்கள் பத்துபேர் பள்ளியில் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்.எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம். நாங்கள் முதன்முதலில் ஒன்றாக சேர்ந்து பார்த்த திரைப்படம் தவமாய் தவமிருந்து, அப்புறம் உள்ளம் கேட்குமே, கடைசியாக சிலம்பாட்டம் பார்த்தோம். முதலில் அவங்களை பற்றி சொல்றேன்.
Srinivasan - இப்போது Banglore NIIT யில் படித்துக் கொண்டிருக்கிறான். இங்கே சென்னையில் வேல் டெக் கல்லூரியில் B.Tech IT முடித்தான். இப்போது அங்கே தகவல் தொழில்நுட்பம் படித்துக் கொண்டிருக்கிறான்.
Sangeetha – இப்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ஆகிட்டா. 2008-ல் திருமணம் முடிந்தது, திருமணம் முடிந்த கையோடு சிங்கப்பூர் கிளம்பிட்டா தன் கணவருடன். இவர்கள் திருமணம் காதல் திருமணம். அவள் குழந்தையின் பெயர் “புவிதா”. அவள் குழந்தையை நான் பார்க்கும்போது மாமா வந்திருக்கான் பாருடா செல்லம் என்று உரிமையோடு என்னிடம் தன் குழந்தையை தந்தாள். நண்பர்கள்தான் என்றாலும் சொந்தம் போல் பழகிவந்தோம் நாங்கள் அனைவரும்……
Saranya – எங்கள் Group-ல் இரண்டு சரண்யா இருக்காங்க. வழக்கமா பெயர் ஒரேமாதிரி இருந்தா அவங்க Initial வெச்சு கூப்படுவோம். ஆனா இவங்க இரண்டு பேருக்கும் Initial V, அப்படினா எதை வெச்சுதான் கூப்பிடுவது. கடவுளா பார்த்து இவளுக்கு கண்ணாடி போட வைத்தார். அப்போதிலிருந்து இவளை நாங்க எல்லோரும் Butti என்றுதான் கூப்பிடுவோம். இவ திருவண்ணாமலை அருணை கல்லூரியில் B.E. – EEE முடிச்சா. இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கிறாள். இவள் பெற்றோர்கள் இவளுக்கு வரன் தேடிக்கொண்டிருக்காங்கனு நினைக்கிறேன்.ரொம்ப நல்ல பொன்னு. கோஞ்சம் சுட்டி…
Saranya – இன்னொரு சரண்யா PMR கல்லூரியில் B.Tech IT முடிச்சா.நான் 12th படிச்சிட்டு இருந்தப்போ நண்பர்கள் தினம் வந்தப்போ இவதான் முதலில் எனக்கு Friendship Band கட்டினா. கொஞ்சம் Matured Person. இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கானு தெரியல.தன் மாமா பையனுக்காக காத்திட்டு இருப்பானு நினைக்கிறேன்….
Arthy – தர்மபுரியில் ஒரு கல்லூரியில் B.Sc முடிச்சா.இப்போ சேலம் வைஷ்யா கல்லூரியில் M.Sc படிச்சிட்டு இருக்கா. இவ வீட்டுக்கு நாங்க எல்லோரும் போய் இவளை வசமா வீட்டுல போட்டுகொடுத்துட்டோம். அட வேற ஒன்னும் இல்ல, இவ லவ் மேட்டர இவங்க அம்மாகிட்டதான் சொன்னோம். இது ஒரு தப்பா நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் என் செயல்தான். கடைசியில் அவளின் லவ் ஓகே ஆகிடுச்சு தெரியுமா. இந்த விஷயத்தை மட்டும் அவ எப்பவும் மறக்க மாட்டா நான் அவளை மாட்டிவிட்டு அவள் காதலுக்கு அவள் வீட்டில் பச்சைகொடி வாங்கிதந்ததையும் மறக்கவேமாட்டாள்…
Dhinesh Kumar – அட இது வேற யாரு… நான்தாங்க. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நான் School Days-ல எப்படி இருந்தேன்னு உங்களில் யாருக்குமே தெரியாது. ரொம்ப வால்தனம், கொஞ்சம்தான் படிப்பேன், பள்ளியில் எல்லாருக்கும் என்னை தெரியும் அளவிற்கு வால்தனம் செஞ்சிருக்கேன். ஒருநிமிஷம். இதெல்லாம் +1 படிக்கும்போதுதாங்க. +2 வந்ததும் பொட்டிபாம்பா அடங்கி, ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சுட்டேன். எங்கள் Group-ல இருக்கும் பெண்களுக்கு நாங்க மற்ற பெண்களுடன் பேசினால் சுத்தமா பிடிக்காது. அவ்ளோ Possessive. அவங்களை வெறுப்பேத்தவே அவங்க கண்முன்னாடியே பேசுவோம், நான்தான் அவங்களை வெறுப்பேத்தனும்னே அதிகமா பேசுவேன். மத்தவங்களிடம் பேசிட்டு இவங்ககிட்ட போனா, …………………………………………. மன்னிசிடுங்க. அதையெல்லாம் இங்கே எழுத முடியாது. அவங்க எங்களை அவ்ளோ திட்டுவாங்க. அதுவும் நானும் வசந்த்-ம் தான் அதிகமா மத்தவங்ககிட்ட பேசுவோம், இவங்ககிட்ட அதிகமா திட்டும் வாங்குவோம்.
இந்து – எங்கள் Gang உருவாக காரணமே இவள்தான். இவளை பற்றி சொல்ல நிறைய நிறைய நிறைய இருக்கு. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு பக்கத்திலேயே இவள் எப்போதும் இருப்பாள். +1 – ல வெட்டியா இருந்த என்னை அடிச்சு திருத்தி என்னுள் இருக்கும் திறமையை எனக்கு உணர்த்தியவளும் இவள்தான். எனக்கு நல்ல நண்பர்களை தந்தவள். எங்க கேங்க-ல சீனி,நான்,வசந்த் மூனு பேர் இருந்தாலும் இவ என்கிட்ட மட்டும்தான் அதிகம் பேசுவா, என் மேல ரொம்ப பிரியம். இவ வீடு பள்ளியின் பக்கத்திலேயேதான் இருக்கும். இவள் வீட்டின் பக்கத்தில்தான் நாங்கள் அனைவரும் டியூசன் போவோம். உலகமே தெரியாம வளர்ந்துட்டா. நாங்கதான் இவளுக்கு உலகத்தை அறிமுகப்படுத்தி வெச்சோம்னுகூட சொல்லலாம். அவ்வளவு அப்பாவி. தினமும் நான் பள்ளிக்கு செல்லும்போது இவள் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். நான் வரும்வரை இவளும் மற்ற தோழிகளுடன் காத்திருப்பாள். என்றாவது ஒருநாள் நான் வர லேட் ஆனால் மற்றவர்கள் எவ்வளவுதான் சொன்னாலும் நான் வரும்வரை பள்ளிக்குள் செல்லமாட்டாள். படத்துக்கு போனா, என் பக்கத்தில்தான் அமர்ந்துக்கொள்வாள், Interval-ல் நான் என்ன Ice Cream சாப்பிடுறேனோ அதையேதான் இவளும் சாப்பிடிவாள், ஹோட்டல் போனா, அங்கேயும் என் பக்கத்தில்தான் இருப்பா நான் ஆர்டர் செய்வதையேதான் இவளும் ஆர்டர் செய்வாள். நாங்கள் எங்கேயாவது ஊர் சுற்றினால் இவள் என் சைக்கிளில் என்னுடன் மட்டும்தான் வருவாள். எதிலும் என்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தாள். பள்ளியில் நான்தான் முதல் மதிப்பெண் எடுக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டாள். கடைசியில் இவள்தான் முதல் மதிப்பெண் எடுத்தாள். அதற்கு இவள் என்னிடம் தனியாக வந்து ரொம்ப அழுதாள். நான் அவளை திட்டி, அவளின் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினேன். நான் பள்ளியில் மூன்றாவதாக வந்தேன். இதுதான் எங்களுக்குள் ஏற்பட்ட முதல் பிரிவு. பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். ஏதாவது பாடத்தில் சந்தேகம் இருந்தாலோ அல்லது வகுப்பு சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும்தான் பேசிப்போம். நாங்க டியூசனில்தான் அதிகம் பேசுவோம். டியூசன் 7 மணிக்கு முடியும். இருந்தாலும் நாங்க எல்லோரும் 8 மணிவரை பேசிட்டுதான் வீட்டிற்கு செல்வோம். இந்துவோட வீடு டியூசன் பக்கத்திலேயே என்பதால் டியூசன் முடிஞ்சதும் இவள் வீட்டிற்கு சென்று மொட்டைமாடியில் அனைவரும் ஒருமணி நேரம் பேசிட்டுதான் செல்வோம். மதியம் உணவு இடைவேளையில் நான் வீட்டிற்கு சாப்பிட வருவேன். அப்போ இவள் எனக்கு போன் பன்னுவா. அப்போவெல்லாம் Land Line தான். இருந்தாலும் நான் சாப்பிட்டுகிட்டே அவகூட பேசுவேன். சாப்பிட்டு முடிச்சிட்டு SS Music – ல பாட்டு கேட்டுட்டு பள்ளிக்கு கிளம்புவேன். அப்போ சன் மியூசிக் எல்லாம் அவ்ளோ Famous இல்ல. எதாச்சும் சேனலில் நல்ல பாட்டு வந்துச்சுனா எனக்கு உடனே போன் செய்து சொல்லிடுவா. “மாயா காதல் மாயா” என்று ஒரு பாட்டு ராஜ் டிவியில் போயிட்டு இருக்கு அதை கேளுடானு சொன்னா. அன்று முதல் அந்தபாடல் இன்றுவரை என் உயிரில் கலந்துவிட்டது, மாயா என்னும் பெயரும்.. இவளுக்கு ஒரு நன்றியை இங்கே இப்போது சொல்லிக்கொள்கிறேன். அப்புறம் Friends எப்பவும் Thanks, Sorry சொல்லிக்க கூடாதுனு எனக்கு சொல்லிதந்தா. ம்.. சொல்ல மறந்துட்டேனே இவங்க வீட்டில் ரொம்ப Strict. இவளுக்கு அண்ணா பல்கலையில் B.E. ECE Seat இருந்தது. ஆனா நான் B.E. GeoInformatics தான் எடுப்பேன்னு அவகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன். அதனால அவளும் இதையே அடம்பிடிச்சு எடுத்தா. நானும் சொன்னபடியே இதையேதான் எடுத்தேன். ஆனால் ஒரு பெரிய Tragedy என்னவென்றால், அவள் வீட்டில் அவளை சென்னையில் படிக்க அனுமதிக்கவில்லை. ( எங்க வகுப்பில் 40 சீட் என்றாலும் இவள் அதை எடுத்துவிட்டு சேராமல் விட்டதால் இவள் பெயர் வகுப்பின் வருகைப் பதிவேட்டில் இடம்பெறாமலே போய்விட்டது ). இடம் கிடைத்தது அண்ணா பல்கலைகழகம் என்றாலும் அவர்கள் வீட்டில் அவளை அனுமதிக்கவில்லை. அவள் வீட்டில் Teacher Training சேர்த்தாங்க. 2 வருஷம் Course முடிச்சா. அதிலும் District First எடுத்தா. கொஞ்ச நாள் ஒரு சிறிய தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பார்த்தாள். இப்போ அரசு வேலை கிடைத்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள். இவள் ரொம்ப ரொம்ப சுட்டி ரொம்ப குழந்தைதனமானவள். இவள் குணத்திற்கு ஏற்றார் போலவே சின்னஞ்சிறு குழந்தைகளுடன் இருக்கும்படியான வேலை கிடைத்துவிட்டது. சொல்ல மறந்துட்டேனே. எங்கள் கேங்க் பேர் வைக்கும்போதுகூட என் பெயருக்கு பின்னால் இவள் பெயர் வரவேண்டும் என்று அடம்பிடித்து 4SADIKUV என்று வைத்தாள். பள்ளி முடியும்போது அனைவரும் Slam Book எழுதுவோம் இல்லையா, அப்போதுகூட நான் எழுதிய பக்கத்திற்கு அடுத்த பக்கத்தில்தான் இவள் எழுதுவாள். ஒருவேலை வேறு யாராவது எழுதியிருந்தால் அந்த Slam Book-ல் சுத்தமாக எழுத மாட்டாள். இவள் Short Temper. அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்காக கோபப்படுவா. ஆனா அதை வெறும் 5 நிமிஷத்திலேயே மறந்திடுவாள். இவள் கோபத்தை போக்க ஒரு சாதாரண வழி இருக்கு. Munch, 5 Star, MilkyBar இதில் ஏதாச்சும் வாங்கிதந்தாள் கோபம் உடனே போயிடும். எப்பவும் ஏதாச்சும் சாப்பிட்டுடே இருப்பா. ரொம்ப குண்டாக எல்லாம் இருக்க மாட்டாள். இருந்தாலும் நான் அவளை அரிசிகடை என்று தான் கூப்பிடுவேன். நான் இவளை இப்படி ஒவ்வொருமுறை கூப்பிடும்போதும் இவள் சொல்லும் ஒரே வார்த்தை .. ச்சீ.. போடா லூசு…
( நான் ஏன் இவளைப் பற்றி ரொம்ப அதிகமா எழுதுறேன்னு தெரியனுமா. உயிர் தோழி என்பதை படத்திலும் கதைகளிலும் கேட்டிருக்கிறேன். அதை எனக்கு உண்மையாக உணர்த்தியவள் இவள்தான். என்னுயிர் தோழி. என் உயிரை 2 முறை காப்பாற்றிய தோழி…. J )
Karthika – இவள் இப்போது கோவையில் Nursing படிச்சிட்டு இருக்கா. அநேகமாக இன்னும் 2 மாதத்தில் இவள் படிப்பு முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.
Uma – இவளும் திருச்செங்கோடில் Nursing தான் படிச்சிட்டு இருக்கா. நல்லா நடனம் ஆடுவா. இவளுக்கும் இந்துவுக்கும் அடிக்கடி நடனப்போட்டி வரும். எங்கள் கேங்க் மட்டுமே பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களாய்..
Vasanth – கோவையில் Kumaraguru கல்லூரியில் B.E. Civil முடிச்சிட்டு இப்போ வேலை தேடிக்கொண்டிருக்கான். இவனும் நானும்தான் அதிகம் சுற்றுவோம். எந்த வேலையும் இருக்காது இருந்தாலும் எங்கள் ஊரை ஒருநாளுக்கு 2 முறை சுற்றிவிடுவோம். அதாவது +1 படிக்கும்போது தான் இதெல்லாம். அப்புறம் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சுட்டோம்பா. இவன் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வேன் இவனும் என் வீட்டிற்கு அடிக்கடி வருவான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கொஞ்ச நாளில் Family Friends ஆகிட்டோம்… J
என் நண்பர்களைப் பற்றி இங்கே சொல்லிவிட்டேன், எங்கள் நட்பை பற்றி பின்னர் சொல்கிறேன்…
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment