நமது கல்விமுறை

Friday, October 14, 2016


Lavoisier's Atom Model,
Kepler's Law of Planetary Motion,
Mendel's Law of Inheritance,
Pythagoras Theorems....

இவையெல்லாம் நம் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்த நமது கல்விமுறை, வாழ்க்கைக்கு தேவையானவற்றை, இவ்வுலகிற்கு தேவையானவற்றை சொல்லிக்கொடுக்கவில்லையே!

இவையெல்லாம் நான் பள்ளியில் பயின்றதே. ஆனால் இவற்றை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை.

மரக்கன்றுகள் நடவேண்டும், இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், நாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், பொய் பேசுதல் கூடாது, பிறரை ஏளனமாக எள்ளி நகையாட கூடாது, இயற்கை வளங்களை பேணிக்காக்க வேண்டும், சிக்கனம் செய்ய வேண்டும், உழைப்பே கண் கண்ட தெய்வம், நேர்மையாக வாழ வேண்டும், சமூக அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், இன்னும் இதுபோல ஏராளமான நற்குணங்களை என்று நமது கல்விமுறை நம் மாணாக்கர்களுக்கு எப்போது கற்பிக்கும் ?

இன்றைய கல்விமுறை ஒரு போட்டி மனப்பான்மையையே மாணவர்களிடம் உருவாக்கியுள்ளது. கல்வி கற்றலின் இன்பம் முழுமையாக நம் சந்ததியினருக்கு சென்று சேர்வதில்லை. கல்வியே அனைத்திற்கும் அடிப்படை. அதுவே வாழ்வின் ஆணிவேர். அந்த கல்வியே தடுமாற்றம் காணும்பொழுது, அதை கற்று வளரும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற கவலை எனக்குள் எழாமலில்லை.

கல்வி என்பது சிறந்த மாணவனை உருவாக்காமல், ஒரு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டும். அப்படி நடந்தால் நம் நாடு மட்டுமல்ல ஒவ்வொரு நாடும் வல்லரசாகும்...

* தினேஷ்மாயா *

0 Comments: