Bullroarer
இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். இதனை ஆசியா,ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள். அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக்கொள்ள பயன்படுத்தியுள்ளனர். இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர். இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்புகொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர். நீங்களை இதன் இசையை இங்கே கேட்டு மகிழுங்கள்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment