அன்று நான் உன் வீட்டிற்கு வந்திருந்தேன்...
நல்லவேலை உன் வீட்டில் யாரும் இல்லை....
எப்படி இருக்கடா, என்ன எதுவும் சொல்லாமலே வந்திருக்க. இப்பதான் அம்மா அப்பா வெளியே போனாங்க.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அவங்களை பார்த்திருக்கலாம் இல்ல - என்றாய் வெகுளியாய்...
அதுவரை என் மனதில் எந்தவித சலனமும் இல்லை.. ஏனடி சொன்னாய் கண்ணே.. எனக்கே தெரியாமல் உன்னை பார்த்தேன்.. என்னடா எருமை ஒரு மாதிரி பார்க்குற.. என் தலையில் தட்டிய படியே செல்லமாய் கோபித்துக் கொண்டாய்...
நான் உன் கைகளை தடுத்தேன்.. எத்தனையோ முறை உன் கைகளை பிடித்திருக்கிறேன்.. ஆனால் என்னவோ தெரியவில்லை இப்போது ஒரு புதுவித தடுமாற்றம்...
கண்கள் மோதிக் கொண்டது... இருவரின் மனதிலும் இப்போது போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது...
நிலைமையை உணர்ந்தவளாய் நீ சற்று விலகி நின்றாய்.. கண்சிமிட்டி ஒரு ஓரப் பார்வை பார்த்தாய்... உன் பார்வையில் இருந்த கள்ளத்தனம் எனக்கு புரிந்தது..
டிவி On செய்துவிட்டு Sofa-வில் என் பக்கத்தில் வந்து அமர்ந்தாய்... இசையருவியில் “ பார்த்த முதல் நாளே ” பாடல் வந்தது.. நான் ரொம்ப நல்ல பையன்தான், ஆனால் நீதான் இந்த பாடல் வந்ததுமே என்னை விட்டு தள்ளி அமர்ந்தாய்..
எனக்கு கோபம் வந்துவிட்டது.. சரி நான் போய்ட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்து புறப்பட தயாரானேன்..
ஏண்டா.. என்னாச்சு என்று நீ கேட்டாய்.. ஒன்னுமில்லை..கொஞ்சம் தண்ணீர் மட்டும் தா.. போதும்-னு நான் சொன்னேன்..
நீயும் சமையலறை நோக்கி விரைந்தாய்.. { என்னை விரட்டி விடுவதில் அவ்வளவு ஆர்வமா ? ! }
நானும் உனக்கே தெரியாமல் உன்னை பின் தொடர்ந்தேன்..
நீ Fridge-அ திறந்து தண்ணீர் எடுக்கும் வேளையில் நான் சமையலறைக்குள் வந்தேன்..
எதுக்கு இங்க வந்த, நான்தான் தண்ணீர் கொண்டு வரேன்-னு சொன்னேன்ல என்றாய் நீ..
நான் ஏதும் பேசாமல் உன்னருகில் வந்தேன்.. ஹே.. என்ன பண்ண போற.. வேணாடா எனக்கு பயமா இருக்கு, என்று நீ சொன்னாய்..
நான் உன்னை நோக்கி நடந்து வர நீ சுவரை நோக்கி பின்னால் நடந்தாய்...
இதற்கு மேல் உன்னால் நடக்க முடியாது.. சுவர் உன்னை தடுத்து நிறுத்தியது..
நான் மேலும் உன்னை நெருங்கி வந்தேன்.. நான் உன்னிடம் வந்த போது, உன் கண்களை மூடியவாறே முகத்தை திருப்பிக் கொண்டாய்..
உன் கையில் இருந்த WaterBottle-ஐ கீழே தவறவிட்டாய்.. அது உடைந்து தண்ணீர் என் முகத்தில் தெளித்தது..
அப்போது எனக்கு ஒரு குரல் கேட்டது..
“ டேய் சோம்பேரி அண்ணா.. இன்னும் என்னடா தூக்கம்.. எழுந்து குளிச்சிட்டு காலேஜ் கிளம்பற வேலைய பாரு” என்று செல்லமாய் திட்டினாள் என் அன்பு தங்கை..
நல்ல கனவை கலைத்த கோபத்தில் அவளை திட்டிவிட்டு நானும் காலேஜ் கிளம்பினேன்..
அன்புடன் -
தினேஷ்மாயா
1 Comments:
தங்கைக்கு தான் நன்றி சொல்லனும்
Post a Comment