என் தமிழ் மக்கள்..

Thursday, March 25, 2010


என் தமிழரின் கலாச்சாரமும் பண்பாடும் இன்றுவரை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறது...
வருத்தமான விஷயம் என்னவென்றால் நம் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.. வெளியே காண முடியாத என் தமிழரின் பண்பாட்டையும் அவர்தம் கலாச்சாரத்தையும் இங்கே நான் சேகரித்த ஓவியங்களால் பதிவுசெய்கிறேன்..



சந்தை என்று சொல்வோமே..
அதுதாங்க இது..
வாரத்தில் ஒருமுறை இந்த சந்தை கூடும்... இந்த சந்தையே ஒரு திருவிழாப் போல இருக்கும்..

என்ன சொல்வது.. இயற்கையான பொருட்களை நமக்கு தந்து வந்த இந்த சந்தையினை Super Market - கலாச்சாரம் தின்றுவிட்டது.. அதேசமயம் நமது ஆரோக்கியத்தையும் அழித்துவருவதையும் மறந்திடாதீர்கள்..






எந்த உணவையும் சட்டியிலும் பானையிலும் சமைத்து உண்டு வாழ்ந்தோம்... Cylinder வந்ததும் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது..
 சந்தையில் பானை வாங்க ஒரு கூட்டமே இருக்கும்.. ஒவ்வொரு பானையாக எடுத்துப் பார்த்து, அத தரம் பிரித்து, விரிசல் இருக்கா என சரிப்பார்த்து, பேரம் பேசி வாங்குவதை பார்க்கவே ஆர்வமாய் இருக்கும்..







ஒருவாரம் வீட்டிற்கு தேவையான உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், வாங்க இவரிடம் வருவாங்க.. இவங்ககிட்ட பேரம் எல்லாம் பேச முடியாது ஆனா அதே சமயம் இவர் சொல்லும் விலை ஏற்கும்படியாய் இருக்கும்...













இந்த அம்மா வேர்கடலை வித்துட்டு இருக்காங்க.. இவர் ஈசல் வித்துட்டு இருக்காரு.. என்னது ஈசல்  விக்குறாரான்னு கேட்கிறீங்களா..
அட ஆமாங்க.. ஈசலை வறுத்து விப்பாங்க.. நிறைய பேர் அதை விரும்பி சாப்பிடுவாங்க.. காசும் கொஞ்சம் கம்மிதான். ஒரு படி 2-4 ரூபாய்தான் இருக்கும்..
வேர்கடலையை வேகவைத்தும் விப்பாங்க, பச்சையாகவும் விப்பாங்க.. எனக்கு பச்சை வேர்கடலை சாப்பிடுவதுதான் பிடிக்கும்.. எனக்கும் வீட்டிற்கும் சேர்த்து 2படி வாங்கிட்டு போவேன்..




பார்த்தாவே தெரியும் இவங்க பூ விக்கிறவங்க..
அம்மா பாக்க மகாலட்சுமி மாதிரி இருக்க இந்தாமா கொஞ்சம் பூ வெச்சுட்டு போமா என்று சொல்லி ஒரு சில பெண்களுக்கு பணமேதும் வாங்காமலேயே இவங்க பூ தந்திருக்காங்க.. இவங்ககிட்ட நிறைய பேர் பேரம் பேசுவாங்க.. முகூர்த்த நேரங்க பூ விலையெல்லாம் அதிகம் என்று காரணம் சொல்லி விலையை குறைக்காமல் பாத்துக்குவாங்க..
எப்படியும் எல்லா பூவையும் வித்து தீத்துடுவாங்க..





இவங்க முருங்கைக்காய், மரவள்ளி கிழங்கு விக்கிறாங்க.. ஒரு கட்டு 5 ரூபாய்னு சொல்வாங்க.. கொஞ்சம் பேசினா 3 கட்டு 10 ரூபாய்க்கு வாங்கிடலாம்.. இவங்க தரும் பொருட்கள் ஒரு சில மணி நேரத்திற்கு முன்னர்தான் நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.. அதுதான் இந்த சந்தையின் தனிச் சிறப்பு.. கிட்டதட்ட எல்லா பொருட்களுமே அப்படித்தான்...









இவங்க கோல மாவும் கலர் பொடியும் விக்கிறாங்க.. பலர் ஒரு மாசத்துக்கு தேவையான அளவிற்கு வாங்கிட்டு போவாங்க.. ஏன்னா மறுபடியும் இவங்க எப்ப வருவாங்கனு சொல்ல முடியாது அதனாலதான்..













இவதாங்க நம்ம மண்வாசம் நிறைந்த தமிழ் பெண்.. யார் சொன்னது தமிழ்பெண் என்றால் வீட்டிலேயே இருப்பாள் என்று.. அவள் வீரமானவள், எதையும் ஆணுக்கு சமமாக செய்யும் திறமை அவளுக்கு உண்டு.. இவ என் தமிழச்சிங்க.. வீட்டிற்கு தேவையானதை வாங்கிட்டு சைகிள்-ல வெச்சு தள்ளிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருக்கா..
இந்த Jeans போட்டுட்டு நானும் தமிழ் பெண் தான்னு சொல்லிட்டு சுத்தும் பெண்கள் இவளைப் பார்த்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...





இந்தம்மா பலூன் விக்கிறாங்க.. Helium Gas-னா என்னனு அவங்களுக்கும் தெரியாது அதை வாங்கும் போது எனக்கும் அது என்னனு தெரியாது.. சின்ன வயசுல அப்பா அவர் தோளில் என்னை தூக்கிட்டு இருப்பார், அப்போ அவர் காதுகளில் மெதுவாய் கேட்பேன்.. அப்பா எனக்கு அந்த பலூன் வேணும்பா-னு.. அவர் முதலில் அதெல்லாம் எதுக்குப்பா சீக்கிரமா காத்து போய்டும்னு சொல்லி சமாளிப்பார்.. விடுவேனா நான்.. அட்ம் பிடித்து வாங்கிட்டேன்ல..






இவங்க தேங்காய் விக்கிறாங்க.. விலை பரவாயில்லைனு சொல்ற மாதிரி இருக்கும்.. ஆனா எல்லா தேங்காயும் நிச்சயம் நல்லதாகவே இருக்கும் ஒன்றுகூட அழுகிய தேங்காயாக இருக்காது.... சந்தை முடியறதுக்குள்ள பாதிக்கு மேல வித்து தீந்துடும்...











இந்தம்மா மாம்பழம் விக்குறாங்க...
மாம்பழம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முக்கனிகளில் ஒன்றல்லவா..
இப்பெல்லாம் எங்கங்க நல்ல மாம்பழம் கிடைக்குது.. இருக்குற நல்ல மாம்பழங்களை எல்லாம் Maaza, Slice, Frooty, இப்படி பல கம்பெனிகள் எடுத்துக் கொள்கிறது.. மீதம் இருப்பதை இன்றைய வியாபாரிகள் கல் வைத்தோ அல்லது புகை போட்டோ பழுக்க வைக்கிறாங்க.. எல்லாம் வியாபாரமாகிருச்சி.. மக்களின் நலன் பற்றி யாருக்கென்ன கவலை சொல்லுங்க பார்ப்போம்...




படிக்க வேண்டிய வயசுல இந்த பெண் வயிற்றுப் பிழைப்பிற்காக இப்படி கயிறு மேல் ஆடிட்டு இருக்கா.. இதை பார்க்கவும் மக்கள் கூட்டம் இருக்கும்.. ஆனா என்ன இவங்களுக்கு அவ்வளவா பணம் வராது.. ஒரு சந்தையில் 100-150 வரை தான் கிடைக்கும்... நினைச்சு பார்த்தால் கஷ்டமாதாங்க இருக்கு..ம்.. என்ன பன்றது...









இவங்க மீன் விக்கிறாங்க.. நான் அதிகமா கொடுவா மீன்தான் சாப்பிட்டிருக்கேன்.. ஏன்னா அதில்தான் முள் இருக்காது.. அப்பா ஒருமுறை சொன்னார்.. எந்த மீன்-ல முள் அதிகமா இருக்கோ அதுதான் நல்லாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும்னு அதனால அப்ப இருந்து அம்மா எந்த மீன் வாங்கி சமைத்தாலும் சாப்பிடுவேன்.. இந்தம்மா மீன் கடை ரொம்ப பரப்பரப்பா இருக்கும்.. எப்பவுமே மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்..























எழுத டைம் இல்ல Friends... சீக்கிரம் இதை எழுதி முடிச்சடறேன்...

என்றென்றும் அன்புடன் -

அன்பு தோழன், அன்பு தமிழன்

தினேஷ்மாயா 

2 Comments:

elamthenral said...

பாதி அழிந்துவிட்டது....

மீதி புதிதாய் வந்த அலுவலக கூடகங்களில் கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள்......

நாம உபயோகித்த அனைத்தையும் நம் வருங்காலத்தினறக்கு
பொருட்காட்சிக்கு கூட்டிட்டுபோய்தான் காட்டபோகிறோம்...

எனக்கு இந்த கலச்சாரம் சுத்தமா பிடிக்கல...

மறுபடியும் இந்த காலம் திரும்பி கிடைக்குமா??? தினேஷ்....!!!!!

தினேஷ்மாயா said...

mannichidunga ka.. intha kaalam thirumba varave varathu.. but ithai en padathil nichayam pathivu seiven ka..
inge mannin manam maramal iruppavarkal konjam perthan illa ka.. etho angeyum ingeyum konjam konjamai intha kalacharam irunthu varum enru nambukiren ka...