என் தேவதையே, என்று உன்னை முதன்முதலில் அந்த பயணத்தில் பார்த்தேனோ அன்றே என் காதல் பயணமும் தொடங்கிவிட்டது..
வெறுமையாய் கழிந்த என் நாட்கள் உன் நினைவுகளால் நிரம்பியது..
நீ தேடிக்கொண்டிருந்தவள் இவளோ என்று என் இதயம் கேள்வி கேட்கும் முன்னரே ஆமாம் என்றது என் கண்கள்..
அந்த பயணத்தில் என் கையில் காகிதமும் இல்லை, எழுதுகோலும் இல்லை. இருப்பினும் எனக்கு கவிதை எழுத வேண்டும்போல் இருந்தது..
என் கண்களை மூடிக்கொண்டேன். உன் பார்வைகள்தாம் என்னை முழுதுமாய் ஆட்கொண்டது.. உன் உருவம் முழுதும் என் மனதில் எழுதிவிட்டேன் கவிதையாய்..
கண்களுக்கு இத்தனை சக்தியுண்டா..
ஒருநொடிதான் பார்த்திருப்பேன் உன்னை..
ஆனால் ஒருஜென்மம் வாழ்ந்துவிட்ட மனதிருப்தி எனக்கு..
உன்னுடன் பழக நான்கு நாட்களே கிடைத்தது.. ஒரு நொடியிலேயே தன்னை இழந்தவன் நான்கு நாட்கள் உன்னுடன் பேச முடிந்தது நான் பெற்ற வரம் என்றே சொல்வேன்..
உன் கண்களை நான் படித்தேன்.. என் மனதை நிச்சயம் நீயும் படித்திருப்பாய்..
உன்னை பார்த்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு இதுவரை மற்றவரை பார்த்தபோது ஏற்பட்டதில்லை.. இதுதான் காதல் என்பதோ..
எல்லோருக்கும் பயணம் எப்போது முடியும், எப்போது வீடு திரும்புவோம் என்று ஏங்கி கொண்டிருக்க, நான் மட்டும் ஜன்னலோரம் அமர்ந்துக்கொண்டு, பயணம் இன்னும் தாமதம் ஆகாதா என்று தவித்துக்கொண்டிருந்தேன்.. என் தவிப்பை நீ அறிந்திருப்பாயோ.. அல்லது இதை படிக்கும்போது கொஞ்சம் பின்னால் சென்று நினைவுபடுத்திப் பார்ப்பாயோ..
உன்னைப் பற்றி நான் எதுவும் அறியவேண்டியதில்லை.. ஏனென்றால் நான்தான் உன்னை நேசிக்கிறேனே.. நீதான் என்னைப் பற்றி அறிய வேண்டும்..நல்லவேலையாக அதற்கும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.. ஆனால் என்னைப்பற்றி நீ எந்த அளவிற்கு அறிந்துக்கொண்டாய் என்பது உனக்கே வெளிச்சம்.. இருப்பினும் என்னை கொஞ்சமாவது நீ நேசித்திருப்பாயல்லவா..
வழக்கமாக பெண்கள்தாம் அதிகம் பேசுவார்கள். ஆனால் இங்கே நான்தான் அதிகம் பேசினேன்.. நீ உன் பார்வைகளையும் தலையசைவையும் மட்டுமே எனக்கு பதிலாய் தந்து கொண்டிருந்தாய்..
நான் உன்னுடன் பேசிய அந்த 5 மணிநேரம் நான் அங்கே இல்லை.. எங்கோ உயரத்தில் பறந்துகொண்டிருந்தேன்.. உன் கண்களை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை இருப்பினும் உன் கண்களை பார்ப்பது எனக்கு பிடித்திருந்தது.. எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. நான் எப்படி அவ்வளவு நேரம் உன் கண்ணை பார்த்து பேசினேன் என்று..
ஒன்று மட்டும் தெரிந்துக்கொள்.. உன்னை கண்ட அந்த முதல்நொடியிலேயே என்னை இழந்துவிட்டேன் உன்னிடம்..
நீ என்றாவது நினைத்துப்பார்த்தாயா.. ஏன் நீ என்னை இத்துனை நாட்கள் கழித்து சந்திக்க வேண்டுமென்று..
அதுதான் விதி என்பது.. அதுதான் காதலின் மகத்தான சக்தி..
நாம் இன்று சந்திதுக்கொண்டதற்கான காரணத்தை நீ,
நாம் வாழும் வாழ்க்கையில் அறிந்துக்கொள்வாய்..
இத்துனை சிறப்பான வாழ்க்கையினை நாம் இருவரும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்பது இறைவனின் ஆசை என்பதை..
ஒன்றும் இல்லாமல் என் பயணத்தை துவங்கினேன்..
என் வாழ்க்கையினை பார்த்துவிட்ட மனநிம்மதியுடன் பயணத்தை முடித்துக்கொண்டேன்..
எல்லாம் சரி.. நான் உன்மீது காதல்கொண்டது உனக்கு நம் பயணத்தின் முடிவில் தெரிந்துவிட்டதோ உனக்கு..
சரி மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி நாம் விடைப்பெற்று சென்றப்பின்னர், சிறிது தூரம் நடந்துவிட்டு ஏனடி என்னை திரும்பிப்பார்த்தாய்..
வெகுதூரம் பயணம் சென்று திரும்பினால் எதையாவது தொலைத்துவிட்டு
வரவேண்டுமென்பது எழுதப்படாத நியதி..
நான் எதையும் தொலைக்கவில்லை என்பதை அறிந்து நீ என் இதயத்தை திருடிக்கொண்டாய் உன் ஓரப்பார்வையில்..
என் இதயம் உன்னுடனே இருக்கட்டும்.. அதற்கு மாறாக உன் இதயத்தை நான் பெற்றுக்கொள்கிறேன் உன் மனதில் உண்மையான காதலுடன்....
அதுவரை என் உயிரையும் என் இதயத்தையும்-
----நீயே வைத்துகொள்----
காதலுடன் -
தினேஷ்மாயா
{இது என் முதல்படம் மாயாவிற்காக நான் யோசித்துவைத்திருந்த ஒரு சின்ன Scene... வெறும் கற்பனைதாங்க... }
0 Comments:
Post a Comment