அவள் யாரவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிரில் எங்கோ சலனம்
இன்னொரு இன்னொரு ஜனனம்
அது உன்னைக் காண்கிற தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே.....
அவள் யாரவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...
அன்பே என் நெஞ்சில் போர்க்கப்பல்
போல் வந்து சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே... தாக்காதே...
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்கப் பெண்ணாக மாறாதே...
அந்தி நிலா அந்தி நிலா அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா என்னையொரு அர்த்தமென செய்தவளா...
செவ்வரி மூடிய வழிகள் அது செந்தமிழ் ஊற்றிய விழிகள்
புன்னகை செய்யும் புயல் வேகமே
அவள் யாரவள் அழகானவள்...
அவள் யாரவள் அழகானவள்..
அடி நெஞ்சிலே மின்னல்...
ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டிச் சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்...
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும் நான் வந்து
செவ்வாயின் ஓரத்தில் தேன் வார்ப்பேன்...
என்னுயிரே என்னுயிரே மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே என்னுயிரே பொய்யல்ல நான் இங்கு நீ ஆனேன்
சட்டென சட்டென இதயம் பல சில்லெனெ சில்லென உடையும்
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே...
அவள் யாரவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிரில் எங்கோ சலனம்
இன்னொரு இன்னொரு ஜனனம்
அது உன்னைக் காண்கிற தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே.....
என்ன படம்னு சரியா தெரியல.. “அன்பு” படம்னு நினைக்கிறேன்..
- தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment