மறந்துவிடட்டுமா.. இறந்துவிடட்டுமா ?

Wednesday, March 31, 2010



என் நாடித் துடிப்பாய்
நீ இருக்கையில்
மறந்துவிடு என்கிறாய்....
என் இதயம்
நின்று விடுமே உயிரே....

உன்னை மறப்பதைக் காட்டிலும்
இறப்பதே மேலடி கண்ணே....


காதலுடன் -

தினேஷ்மாயா 

இது போர்க்களமா இல்லை தீக்குளமா







இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே
இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே


தீயின் மனமும் நீரின் குணமும் 
எடுத்துச் செய்தவள் நீ நீயா
 
தெரிந்தப் பக்கம் தேவதையாக
 
தெரியாப் பக்கம் பேய் பேயா
 
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
 
என்னைத் தின்றாய் பிழையில்லையா
 
வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
 
வீட்டில் உனக்கு உணவில்லையா
 
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
 
இடிமழை மின்னல் ஆரம்பம்
 
பாதம் கேசம் நாபிக்கமலம்
 
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
 
தகதகவென எரிவது தீயா
 
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
 
தொடுதொடுவெனச் சொல்லுகின்றாயா

கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா


நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன் 
நாளை உன்னைக் காண்பேனென்றே

நீண்ட இரவைப் பொறுக்கின்றேன் 
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
 
இன்னும் என்ன செய்வாயோ
 
செப்படிவித்தை செய்யும் பெண்ணே
 
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
 
எந்தக் கயிறு உந்தன் நினைவை
 
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
 
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
 
உன்பேர் சொல்லி அடங்குமடி

படபடவென படர்வதும் நீயா 
விடுவிடுவென உதிர்வதும் நீயா 
தடதடவென அதிரவைப்பாயா 
தனிமையிலே சிதறவைப்பாயா

இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே


காதலுடன் - 


தினேஷ்மாயா 

அவள் யாரவள் அழகானவள்

Tuesday, March 30, 2010



அவள் யாரவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிரில் எங்கோ சலனம்
இன்னொரு இன்னொரு ஜனனம்
அது உன்னைக் காண்கிற தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே.....

அவள் யாரவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...

அன்பே என் நெஞ்சில் போர்க்கப்பல்

போல் வந்து சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே... தாக்காதே...
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்கப் பெண்ணாக மாறாதே...
அந்தி நிலா அந்தி நிலா அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா என்னையொரு அர்த்தமென செய்தவளா...
செவ்வரி மூடிய வழிகள் அது செந்தமிழ் ஊற்றிய விழிகள்
புன்னகை செய்யும் புயல் வேகமே

அவள் யாரவள் அழகானவள்...
அவள் யாரவள் அழகானவள்..
அடி நெஞ்சிலே மின்னல்...

ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டிச் சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்...
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும் நான் வந்து
செவ்வாயின் ஓரத்தில் தேன் வார்ப்பேன்...
என்னுயிரே என்னுயிரே மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே என்னுயிரே பொய்யல்ல நான் இங்கு நீ ஆனேன்
சட்டென சட்டென இதயம் பல சில்லெனெ சில்லென உடையும்
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே...

அவள் யாரவள் அழகானவள்

அடி நெஞ்சிலே மின்னல்...
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்...
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிரில் எங்கோ சலனம்
இன்னொரு இன்னொரு ஜனனம்
அது உன்னைக் காண்கிற தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே.....


என்ன படம்னு சரியா தெரியல..  “அன்பு” படம்னு நினைக்கிறேன்..


- தினேஷ்மாயா

பென்சில் சிற்பங்கள்...

நாம் பென்சிலை வரைய, கோடு போட, பக்கத்தில் இருக்கும் நண்பனை குத்த, வாயில் வைத்து கடிக்க, இப்படி இன்னும் நிறைய விஷயதுக்காக பயன்படுத்தி இருக்கிறோம்..

ஆனால் இங்கே கொஞ்சம் வித்தியாசமாய் பென்சிலை பயன்படுத்தி சிலை வடித்திருக்கின்றனர்.. பார்த்து வியப்படையுங்கள்...
















































































என்றென்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 

முதல் முத்தம்...



அன்று நான் உன் வீட்டிற்கு வந்திருந்தேன்... 
நல்லவேலை உன் வீட்டில் யாரும் இல்லை....
எப்படி இருக்கடா, என்ன எதுவும் சொல்லாமலே வந்திருக்க. இப்பதான் அம்மா அப்பா வெளியே போனாங்க.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அவங்களை பார்த்திருக்கலாம் இல்ல -  என்றாய் வெகுளியாய்...

அதுவரை என் மனதில் எந்தவித சலனமும் இல்லை.. ஏனடி சொன்னாய் கண்ணே.. எனக்கே தெரியாமல் உன்னை பார்த்தேன்.. என்னடா எருமை ஒரு மாதிரி பார்க்குற.. என் தலையில் தட்டிய படியே செல்லமாய் கோபித்துக் கொண்டாய்... 

நான் உன் கைகளை தடுத்தேன்.. எத்தனையோ முறை உன் கைகளை பிடித்திருக்கிறேன்.. ஆனால் என்னவோ தெரியவில்லை இப்போது ஒரு புதுவித தடுமாற்றம்...

கண்கள் மோதிக் கொண்டது... இருவரின் மனதிலும் இப்போது போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது...

நிலைமையை உணர்ந்தவளாய் நீ சற்று விலகி நின்றாய்.. கண்சிமிட்டி ஒரு ஓரப் பார்வை பார்த்தாய்...  உன் பார்வையில் இருந்த கள்ளத்தனம் எனக்கு புரிந்தது..

டிவி On  செய்துவிட்டு Sofa-வில் என் பக்கத்தில் வந்து அமர்ந்தாய்... இசையருவியில் “ பார்த்த முதல் நாளே ” பாடல் வந்தது.. நான் ரொம்ப நல்ல பையன்தான், ஆனால் நீதான் இந்த பாடல் வந்ததுமே என்னை விட்டு தள்ளி அமர்ந்தாய்..

எனக்கு கோபம் வந்துவிட்டது.. சரி நான் போய்ட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்து புறப்பட தயாரானேன்..

ஏண்டா.. என்னாச்சு என்று நீ கேட்டாய்.. ஒன்னுமில்லை..கொஞ்சம் தண்ணீர் மட்டும் தா.. போதும்-னு நான் சொன்னேன்..

நீயும் சமையலறை நோக்கி விரைந்தாய்.. { என்னை விரட்டி விடுவதில் அவ்வளவு ஆர்வமா ? ! }

நானும் உனக்கே தெரியாமல் உன்னை பின் தொடர்ந்தேன்..
நீ Fridge-அ திறந்து தண்ணீர் எடுக்கும் வேளையில் நான் சமையலறைக்குள் வந்தேன்..

எதுக்கு இங்க வந்த, நான்தான் தண்ணீர் கொண்டு வரேன்-னு சொன்னேன்ல என்றாய் நீ..

நான் ஏதும் பேசாமல் உன்னருகில் வந்தேன்.. ஹே.. என்ன பண்ண போற.. வேணாடா எனக்கு பயமா இருக்கு, என்று நீ சொன்னாய்..

நான் உன்னை நோக்கி நடந்து வர நீ சுவரை நோக்கி பின்னால் நடந்தாய்...
இதற்கு மேல் உன்னால் நடக்க முடியாது.. சுவர் உன்னை தடுத்து நிறுத்தியது..

நான் மேலும் உன்னை நெருங்கி வந்தேன்.. நான் உன்னிடம் வந்த போது,  உன் கண்களை மூடியவாறே முகத்தை திருப்பிக் கொண்டாய்..

உன் கையில் இருந்த WaterBottle-ஐ கீழே தவறவிட்டாய்.. அது உடைந்து தண்ணீர் என் முகத்தில் தெளித்தது.. 

அப்போது எனக்கு ஒரு குரல் கேட்டது..
“ டேய் சோம்பேரி அண்ணா.. இன்னும் என்னடா தூக்கம்.. எழுந்து குளிச்சிட்டு காலேஜ் கிளம்பற வேலைய பாரு” என்று செல்லமாய் திட்டினாள் என் அன்பு தங்கை..

நல்ல கனவை கலைத்த கோபத்தில் அவளை திட்டிவிட்டு நானும் காலேஜ் கிளம்பினேன்..


அன்புடன் -

தினேஷ்மாயா 







எது சிங்கார சென்னை ?

Monday, March 29, 2010







சில தினங்களுக்கு முன்னர் வரும் வழியில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படித்தேன்..
இன்னமும் 4 மாதங்களில் சென்னை சிங்கார சென்னையாக மாறிவிடும் என்று..
அதுவும் தமிழகத்தின் தற்போதைய துணை முதல்வர் அதை தெரிவித்ததாக படித்தேன்..

எது சிங்கார சென்னை..

  • இன்றும் வீடில்லாமல் கூவத்தின் அருகே வசிக்கின்றனர் மக்கள்.. 
  • குப்பைகள் கண்ட இடங்களில் வீசுகின்றனர் மக்கள்..
  • பேருந்துகள் எப்போதுமே கூட்டமாகத்தான் செல்கிறது..
  • ஒழுங்கான உள்கட்டமைப்பு இல்லை..
  • சட்டம் ஒழுங்கு மீறப்பட்டுத்தான் வருகிறது..
  • மக்கள் நிம்மதியாய் வாழ்வதாக தெரியவில்லை..
  • குடிநீர் வசதி சரியாக இல்லை..
  • சாலை வசதி பல இடங்களில் மோசமாக இருக்கிறது..
  • தெருக்களில் குப்பைத் தொட்டிகளை வைப்பதோடு சரி.. அதை அள்ளிச் செல்ல முறையான வாகனங்கள் இல்லை.. Germany-ல் இருந்து வாகனம் வாங்கினாலும் குப்பைகளை சாலையெங்கும் தூவியபடியேதான் செல்கிறது..

சொல்ல வேண்டுமென்றால் இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..சொல்வதை விடுத்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்..
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியாது.. மக்களும் சேர்ந்து உதவ வேண்டும்..
நம் சென்னையை நாம் தான் சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும்.. அரசை மட்டுமே நம்பி கொண்டு சும்மா இருக்க வேண்டாமே..


நட்புடன் -

தினேஷ்மாயா