காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்

Sunday, March 09, 2014



காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை வரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழைக்கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
மழைநாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்
மழைக்காற்றாய் தலைக்கோதி நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
காலம் மாற்றம் நேரும்போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..


திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: லதா ரஜினிகாந்த்.

    திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தத்தை எடுத்து சொல்லும் பாடல். மூன்று முடிச்சுக்குள் இருக்கும் அர்த்தம் புரியவைத்திருக்கிறார் வைரமுத்து அவர்கள். இந்த பாடல் வெளிவந்த இரு நாட்களில் பலமுறைக்குமேல் கேட்டிருப்பேன். கோச்சடையானின் மற்ற பாடல்களைவிட இந்த பாடல் என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த பாடலை கேட்கும்போது இப்படியொரு பெண் கிடைக்கவேண்டும் என்று மனம் சொல்கிறது. இந்த பாடலை கேட்கும் போதுதான் திருமணத்தின்மீதே ஆசை வருகிறது.

* தினேஷ்மாயா *

0 Comments: