ஒத்தநொடியிலதான் எனக்கு

Saturday, March 29, 2014



ஒத்தநொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த ஒலகமுமே அடடா சுத்தம் மறந்திருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சு குழியில கவுளி கத்துது
தீ கங்குல பால் செட்டிய போல் பொங்குறனே
ஏ.. பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
எனை தொட்டதுபோல் தொட்டுவிட்டாள் அழகு ரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவெச்சா அந்த புள்ள
குண்டுமல்லி நெஞ்சுக்குள்ள
அ.. வேற சொல்லு இல்ல நானும் சொல்ல
ஏ.. பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சர்க்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி
இப்படிநான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீல..
பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிருச்சே



படம்: குக்கூ
இசை: சந்தோஷ் நாரயணன்
வரிகள்: யுகபாரதி
குரல்: RR

* தினேஷ்மாயா *

0 Comments: