ஆகாசத்த நான் பாக்குறேன்

Saturday, March 29, 2014



ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக
உன்னால பாத்தேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணே படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே உன் கரமா
கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

காம்ப தேடும் குழந்தையா
உன்னை தேடும் உசிரு பசியில
கோடி பேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக
உன்னால பாத்தேனே


படம்: குக்கூ

வரிகள்: யுகபாரதி

இசை: சந்தோஷ் நாரயணன்

குரல்: கல்யாணி, பிரதீப்

* தினேஷ்மாயா *

0 Comments: