நம் வாழ்வில் பூக்களின் பங்கு பெரிதும் கலந்திருக்கிறது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் பூக்களை நாம் பயன்படுத்துகிறோம்.
ஒருவரை வாழ்த்த மலர்கொத்து கொடுக்கிறோம். திருமணத்தில் சில நேரங்களில் மலர்கொத்து கொடுத்து வாழ்த்துவோம், திருமண மேடையை அலங்கரிக்க பூக்களை பயன்படுத்துகிறோம், கிறித்துவ திருமணத்தில் மணப்பெண் கையில் மலர்கொத்து கொடுப்பார்கள், காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், தங்கள் அன்பை பரஸ்பரம் பகிர்ந்துக்கொள்ளவும் பூக்கள் கொடுப்பர், கணவன்மார்கள் மனைவிக்கு பூ வாங்கிகொடுத்தாலே அதுவே மனைவிக்கு அதீத மகிழ்ச்சியாய் இருக்கும், இறைவனுக்கு பூக்களால் அலங்காரம் செய்வோம், அந்த பூவை இறைவன் பாதத்தில் இருந்து எடுத்து பெண் பக்தைகளுக்கு பிரசாதமாய் கொடுப்பர், மலர் கண்காட்சி நடத்துகிறோம், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நம் கலாச்சாரப்படி தலையில் பூ சூடிக்கொள்வார்கள், திருமணத்தின்போது கழுத்தில் பூக்களால் செய்த மாலையை மாற்றிக்கொள்வார்கள், இசுலாமிய மதத்திலும் பூக்களை மக்களின் சமய நிகழ்ச்சிகளில் காணலாம், புத்த மதத்தில் தாமரை பூ பிறப்பை குறிக்கிறது, இறைவனை வணங்கும்போது எதேச்சையாக பூ கீழே விழுந்தால் அது நல்ல சகுணம் என்றெல்லாம் கருதுவோம், பூக்களை காணும்போது நம் மனதுக்குள் பரவசம் ஏற்படும், கவிஞர்கள் பலர் பூக்களை வர்ணித்து கவிதகள் எழுதுவார்கள், பெண்ணை மலரோடு ஒப்பிடுவார்கள், பூக்கள் முதலிரவிலும் காமத்திலும் அதிக பங்குவகிக்கிறது. இதெல்லாம்விட, மனிதன் இறந்தபின்பு அவனது இறுதி சடங்குகள் அனைத்தும் பூக்கள் இல்லாமல் நடக்காது..
பூக்கள் நம் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வில் ஒரு அங்கமாய் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment