இன்று ‘தி இந்து’ நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். ஏற்காட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைதேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்திற்காக கணவம் மனைவி இருவருக்கு இடையே தகராறு வந்ததாகவும் படித்தேன்.
என் வாதம், அவர்களுக்கு ஏற்பட்ட தகராறு அல்ல. மக்கள் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்ற செய்தி உண்மையானதுதான். இதில் எந்த மறுப்பும் இல்லை. அப்படியிருக்க இந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்து மீண்டும் ஒரு நியாயமான தேர்தலை நடத்த கூடாது என்பதுதான் என் கேள்வி. நான் அரசாங்கத்தையோ எந்த கட்சியையோ சாடவில்லை. மக்களைத்தான் சாடுகிறேன். தங்கள் தொகுதிக்கு நல்லது செய்ய ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வர நினைக்கும் இவர்கள் எப்படி உண்மையாக தொகுதி மக்களுக்காக உழைப்பார்கள். இதை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாத மக்கள் மீதுதான் எனக்கு அதிக வெறுப்பு உண்டாகிறது.
சற்று ஆறுதலான விஷயம் என்னவென்றால், திரு.வைகோ அவர்கள் இந்த கருத்தை சொல்லியிருக்கிறார். பணம் கையூட்டாக வாங்கிக்கொண்டு ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன, அதனால் இந்த தேர்தலை ஏற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்க அரசியல்வாதிகளில் ஒருவர் இருக்கிறார்.
பி.கு. : நான் எந்த கட்சியை சார்ந்தவனும் அல்ல, எந்த கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment