வறுமையைப் பற்றி ஏதும் அறியாதவர்கள், வறுமையில் வாழ்ந்திராதவர்கள் கைகளில் ஒரு எழுதுகோலை கொடுத்து, ஒரு கோடு வரைய சொல்கிறார்கள். அதுதான் இந்த வறுமைக்கோடு. அவர்களைப்பொறுத்தவரை அது வெறும் கோடுதான்.
வறுமை என்னும் நிலை எவ்வளவு கொடுமையானது என்பது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துக்கொண்டு வறுமையைப்பற்றி பேசவோ, ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு செய்பவன் வறுமைக்கோட்டுக்கு மேலே கீழே என்றோ, அல்லது ஒரு கோடு வரைந்து அந்த கோட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்த இங்கு எவர்க்கும் உரிமை இல்லை.
ஒரு நாள் அந்த வறுமையில் வாடும் மக்களோடு வாழமுடியுமா இந்த ஆட்சியாளர்களால் ?
ஒரு நாள் வேண்டாம், ஒரு மணிநேரம் ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment