ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
அரட்டைகள் அடித்தோமே
குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே
இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை
யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனி மேல் நானே தனியாள் ஆனேன்
நட்பு என்ன நடிப்போ
நமக்கென இருந்தோமே
தினசரி பிறந்தோமே
திசைகளாய் பிரிந்தோமே
கல்யாண காட்டினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது
என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
திரைப்படம்: என்றென்றும் புன்னகை
பாடியவர்கள்: திப்பு, அபய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: கபிலன்
இந்த பாடல் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்டேன். மற்ற பாடல்களைவிட இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நட்பின் பிரிவில் இருக்கும் வலியை சொல்கிறது இப்பாடல். காதலின் பிரிவில் இருக்கும் வலியை தான் அதிகம் பாடலாய் கேட்டிருக்கிறோம். அத்தி பூத்தார்போல நட்பின் பிரிவில் இருக்கும் வலியை வெளிப்படுத்தும் விதமாக வரும் பாடல்களில் இந்த பாடலும் சிறப்பான ஒன்று.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment