சென்னையில் இம்மாத இறுதியில் சென்னை ஓபன் டென்னிஸ் ஆரம்பிக்கப்போகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக சதுரங்க போட்டியை காண என் நண்பர்களை உடன் அழைத்தேன். எவர்க்கும் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டதால் என்னாலும் அந்த போட்டியை நேரில் பார்க்க முடியவில்லை.
இம்முறை சென்னை ஓபன் டென்னிஸ் நடக்கப்போகிறது. இதற்கு என்னுடன் வாருங்கள் என்று எவரையும் அழைக்கப்போவதில்லை. எப்படியும் எவர்க்கும் வர விருப்பம் இருக்காது. அதுவே கிரிக்கெட் என்றால் உடனே வருவார்கள். ஆனால் அதற்கு போக எனக்கு பிடிக்காது. இந்த டென்னிஸ் போட்டியை நேரில் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். கிரிக்கெட் மட்டுமே விளையாட்டல்ல. மற்ற விளையாட்டுக்களையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். நம்மவர்கள் டென்னிஸ்-ல் சானியா மிர்சாவை பார்க்கும் அளவுக்குகூட டென்னிஸை பார்த்திருக்க மாட்டார்கள்.
சென்னையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் ஒருசிலர் மட்டுமே அதை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். அதை நான் ஏன் விடவேண்டும் சொல்லுங்கள்..
என் சிறு வயதில் குடும்பத்தாரோடு ஆசிய கால்பந்து போட்டியை சென்னையில் பார்த்தோம். அதுகூட சரியாக நினைவில் இல்லை. இம்முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்த்துவிட்டு வந்து அந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment