சராசரியாக கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காணப்பட்ட ஹரப்பா மொஜஞ்சதரோ நாகரிக மக்கள் தங்கள் இருப்பிடங்களை நன்கு திட்டமிட்டு நகரங்களையும் வீடுகளையும் சீரான இடைவெளிவிட்டு அமைத்திருந்தனர். மனிதனுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத காலம் அது.
ஆனால், நவநாகரிக மனிதன் வாழும் இந்த காலத்தில் வீடுகளையும் நகரங்களையும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவன் இஷ்டம்போல் கட்டிக்கொள்கிறான். பிற்கால தலைமுறை நம் வாழ்க்கைமுறையை பார்த்து எள்ளி நகையாடப்போகிறது என்பது உண்மை. இப்படி எந்த திட்டமிடுதலும் இன்றி கட்டப்படும் நகரங்களும் வீடுகளும்தான் நாம் அறிவியலில் வளர்ச்சிக்கண்டாலும், மனதளவில் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பது எடுத்துக்காட்டுகிறது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment