அப்பனென்றும் அம்மையென்றும்

Sunday, August 05, 2012






அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞான பெண்ணே குப்பையாக வந்த உடம்பு
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞான பெண்ணே சக்கையாக போகும் கரும்பு
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..... 

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞான பெண்ணே குப்பையாக வந்த உடம்பு


 குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை யேதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூத்தாடும்
விட்டோடும் ஓர் சந்தை கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டு தல்லு
அப்பனென்றும்..... 

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞான பெண்ணே குப்பையாக வந்த உடம்பு


கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டு கெட்டு ஓடும் தல்லாடும்
என்னாலும் உன் உள்ளக் குரங்கு
கட்டுப்பட கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்
அப்பனென்றும்.....

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞான பெண்ணே குப்பையாக வந்த உடம்பு
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞான பெண்ணே சக்கையாக போகும் கரும்பு
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்..... 


அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞான பெண்ணே குப்பையாக வந்த உடம்பு
அது புத்தனென்றும் சித்தனென்றும் பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞான பெண்ணே சக்கையாக போகும் கரும்பு...


திரைப்படம்: குணா
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****



0 Comments: