என் அம்மா

Tuesday, August 14, 2012



விந்தாய் வந்து உன் வயிற்றில் விதையாய் விழுந்தேன்
கருவறையில் நான் எட்டி உதைத்தும் அப்பாவிடம்
சொல்லி சிரித்தாய் அன்பாய்...!!!

முந்நூறு நாட்களும் உன் கருவறையில் என்னை தூங்க
வைக்க உன் தூக்கம் தொலைத்தாய்,
இனி நீ என் மடியில் சுகமாய் தூங்க அந்த பூக்கள்
வெடிக்கும் சத்தத்தையும் போரிட்டு நிறுத்தி
வைக்கிறேன்...!!!

என் மழலையின் மொழி புரிந்த ஒரே மொழி
பெயர்ப்பாளர்,
உன் முத்தம் மட்டும் தான் நான் வாழ்க்கையில் பெற்ற
பெரிய பட்டம்...!!!

பள்ளி செல்லும் அவசரத்தில் உன் வியர்வை துடைத்த
கையில் நீ பிசைந்து ஊட்டிய சோற்றை நான் எவ்வளவு
செலவு செய்தாலும் கிடைக்காது...!!!

மழையில் நனைந்து வீடு வந்ததும் உன் புடவை
முந்தானையில் துடைக்கும்போது வரும் வாசனையை
எந்த வாசனை திரவியத்தில் பெறுவேன்...!!!

உலகமே நான் தீயவன் என்று சொன்னாலும், என்னை
அணைத்து எம் மகன் நல்லவன் என்று சொல்லும் உன்
நம்பிக்கை இருக்கும்வரை எத்தனை தோல்வி வந்தாலும்
எழுந்து நின்று போராடுவேன் உயிர் போகும்
வேலையிலும்...!!!

ஆனால் ஒரு வருத்தம் உன் மேல், மீண்டும் ஒரு
பத்துமாதம் சுமக்க மாட்டாயா என்று உன்னை என்
நெஞ்சி சுமந்து , ஏக்கத்துடன் நான்...!!!

எத்தனையோ கவிதை என்னை காயப்படுத்திய
காதலியை பற்றி, என் கண் முன்னே இருக்கும்
தேவதை(தா)யே உனக்காய் இந்த மகனின் இந்த
படைப்பை ஏற்றுகொள்.....

- எழுதியவர் யார் என்று தெரியவில்லை.. இதை எழுதிய அந்த அன்பு மகனுக்கு நன்றி.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: