@ தம்மிடம் இல்லாத
பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
@ நமக்கு எது வசதி
என்பதில்
எது சரி என்பதை
மறந்து விடுகிறோம்.
@ பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க
மாட்டார்கள்.
@ வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும் அனுபவித்து
விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில்
அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத்
தெரியும்.
@ ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத
ஒருவன் கொலைகாரனுக்கு சமமாவான்.
@ கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக்
கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய
கோப தாபங்களால் அவரைக்
காணமுடியாத படி கண்களை மூடி
வைத்துக் கொள்கிறாய்.
@ எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப்
படுமுன் மும்முறை
நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99%
தேவையற்றதாகவே இருக்கும்.அவை உன்னைப் பிடித்து
ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை
நேரமோ இடமோ தருவதில்லை.
@ கண்ணில் பட்ட சிறுமணல்
எப்படி இந்த அழகிய உலகத்தைப்
பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது
சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்
அனைத்தையும் மறைத்து விடும்.
@ வெற்றி என்பதில் எந்தத் தகுதியும்
கிடையாது.உண்மையாகச் சொன்னால்,அது மிகவும் அருவருப்பானது.ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.ஆனால் அதைத்தான் மனம்
விரும்புகிறது.வெற்றி என்பது நம்
பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
@ கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு
சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறார்கள்.
@ சட்டம் என்பது தவறான
மனிதனுக்கு உரியது.சரியான மனிதனுக்கு
அல்ல. ஏனென்றால்,இந்த முழு உலகமும்
தவறான மனநிலையில் செயல் படுகிறது.எப்போதாவது
ஒரு சரியான மனிதன் வந்தால்,அவனை ஒரு அயலான்
போலத்தான் பார்க்கிறது.
@ முழுமை என்று எதுவும்
இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது
ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு
என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து
கொள்வான்.அது எப்போதும் குறைகள்
நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை
நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே
அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம்
நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று
அதற்கு அர்த்தம் இல்லை.
- ஓஷோ
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment