கார்கில் போர்

Friday, August 03, 2012



சமீபத்தில் கார்கில் போர் பற்றி செய்திதாளில் படித்தேன். இப்போரில் இந்தியா வென்றது என்று போட்டிருந்தனர். என் நண்பர் ஒருவருடன் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார், இந்தியா சார்பாக நாம் 500 வீரர்களை இழந்தோம், ஆனால் பாகிஸ்தான் 700 வீரர்களை இழந்தது என்று. இதுதான் வெற்றியா. உயிரிழப்பு அதிகம் இருந்தால் அவர்கள் தோற்றுவிட்டதாக சொல்வதும் நம் பக்கம் உயிரிழப்பு கம்மி என்பதாலும் அப்போரில் அவர்களை வீழ்த்தியதாலும் நாம் வெற்றி பெற்றதாய் ஆகிவிடாது. நான் நம் வீரர்களின் தியாகத்தை என்றுமே குறை கூற மாட்டேன். ஆனால் அப்போரில் இறந்த மொத்தம் 1200 வீரர்களின் குடும்பங்கள் இன்று என்ன நிலையில் இருக்கும் என்று யாராச்சும் சிந்திச்சதுண்டா. அவர்களின் பிள்ளைகள் நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா. அவர்களின் குடும்பத்தின் கதிதான் என்ன என்பதை எந்த அரசும் நினைத்து பார்த்திருக்குமா. 13 வருடங்கள் கடந்துவிட்டது. கார்கில் போரில் பாகிஸ்தான் தோற்றது, இந்தியா வென்றது என்று சொல்வதைவிட, எல்லா போர்களிலும் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதே வெளிப்படையான, யாரும் மறுக்கமுடியாத உண்மை.

போரை கைவிட்டுவிட்டு அன்பை பின்பற்றுவோம்.“அன்பில் பாதை சென்றவனுக்கு முடிவே இல்லையடா” என்ற பாடல் வரிகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: