பழமைவாதிகள்

Thursday, July 31, 2014



 நேற்று ஒரு செய்தி படித்தேன். சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் சுவரொட்டிகளில் அந்த திரைப்படத்தின் நடிகர் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதாகவும், அதைப் பார்த்து நம் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஒரு அமைப்பு தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளனராம்.

சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு திரைப்படத்தை பார்த்து ஒரு தவறான பழக்கத்தை கற்றுக்கொள்ளும் காலமெல்லாம் மலையேறி ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நடிகர் திரைப்படத்தில் புகைப்பிடிக்காவிட்டால் மட்டும் நம் இளைஞர்கள் புகையை நிறுத்திவிடுவார்களா என்ன ?

நடிகர் ரஜினி தன்னுடைய சிவாஜி படத்தில் இருந்து புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்த்து வருகிறார். அப்படியானால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டனரா என்ன ?

புகை என்பது இந்த சமூகத்திற்கே பகை. அதை தடுக்க ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசுதான் முன்வர வேண்டும். அவர்களே புகையிலை பொருட்களை தயாரிக்க சம்மதித்துவிட்டு பிறகு அதில் கட்டாயம் புகையிலை உயிரைக் கொள்ளும் என்று கட்டாய வாசகம் எழுதிவைத்தால் மட்டும் வாங்குபவர்கள் வாங்காமல் இருப்பார்களா என்ன ?

இதுபோன்ற பழமைவாதிகளுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நிச்சயம் இவர்கள் அனைவரும் கற்றது தமிழ் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அந்த படத்தைப் பார்த்துவிட்டு யாராவது தன் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்தில் மட்டுமே சேர்த்தார்களா, இல்லை இவர்கள்தான் தமிழில் பட்டம் படித்தேதீருவேன் என்று படிக்க சென்றார்களா ?

முதலில் திரைப்படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களையே நம்மால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கெட்ட விஷயம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்வது சரியல்ல. திரைப்படத்தை பார்த்து ஒரு பழக்கத்தை ஒருவன் கற்றுக்கொள்கிறான் என்று பேசும் பழமைவாதிகள் 1990-களிலேயே இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பது 21-ஆம் நூற்றாண்டு. இதில் இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் கெட்டுப்போக வெகு சுலபமான பல வழிகள் இருக்கிறது. உண்மையாகவே சமூகத்தின்மீது அக்கறை இருப்பவர்கள் இளைஞர்களை தவறான பாதையில் இட்டு செல்லும் வழிகளை எதிர்த்து போராடவும்.

அதைவிட முக்கியமாக, திரைப்படம் எடுப்பவர்களுக்கும் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டுமே படம் எடுக்காதீர்கள். உங்கள் கதாப்பாத்திரம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புதான். அதனால், இயக்குனர்களும் காட்சிகளை நெறிப்படுத்தி இதுப்போன்ற விமர்சனங்களை தவிப்பது நல்லது.


·         தினேஷ்மாயா * 

மூன்று கனவுகள்

Wednesday, July 30, 2014

கடந்த வாரமும் இந்த வாரமும் எனக்கு வந்த மூன்று கனவுகளைப் பற்றி இங்கே பதிவு செய்கிறேன்.



முதல் கனவு : சென்ற வாரம் வந்த கனவு இது. நான் ஒரு மொட்டைமாடியில் நின்றுக்கொண்டிருக்கிறேன். Telescope வைத்துக்கொண்டு நிலவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிலவு மிகவும் அருமையாகத் தெரிகிறது. சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று நிலவை பார்ப்பதை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கிறேன். நிலவை நான் Telescope வழியாக பார்த்தபோது எப்படி தெரிந்ததோ அதைவிட பல மடங்கு பெரிதாக என் கண்ணுக்கு தெரிகிறது. அதுவும் சில மைல் கிலோமீட்டர் தூரமே இருக்கிறது எனக்கும் நிலவுக்கும். நிலவின் மொத்த ஒருவமும் எனக்கு வட்ட வடிவில் அழகாக தெரிகிறது. அவதார் படத்தில் வருவதுபோல நிலவு கொஞ்சம் நீல நிறத்தில் என்னருகில் தெரிகிறது. இந்த ஆச்சரியத்தை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைக்கிறேன். அதற்குள் கனவு கலைந்துவிட்டது. அடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை.




இரண்டாம் கனவு : இதுவும் சென்றவாரம் வந்த கனவு. நானும் என் நண்பனும் எதோ ஒரு விஷயத்தை செய்துக்கொண்டிருக்கிறோம். அந்த நண்பன் யாரென்று தெரியவில்லை. அவனும் நானும் ஏதோ ஒரு வேலையை செய்துக்கொண்டிருக்கிறோம். அது என்ன வேலை என்றுகூட தெரியவில்லை. எனக்கு அவனுக்கும் அந்த வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் நான் கைலாயத்தில் இருக்கிறேன். என் கண் முன் சிவனும் பார்வதிதேவியும் அமர்ந்திருக்கிறார்கள். நான் பக்தியோடு அவர்களை வணங்குகிறேன். அவர்கள் இருவரும் என்னை ஆசிர்வதிக்கிறார்கள். நான் அவர்களை வணங்கிவிட்டு வருகிறேன். அடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை.


மூன்றாம் கனவு: நேற்றிரவு வந்த கனவு இது. கனவு எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று தெரியவில்லை. எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால், நான் ஒரு காவி உடையில் இருக்கிறேன். பாறைகள் நிறைந்த பாதையில் நான் நடந்துக்கொண்டிருக்கிறேன். என் முன்னர் சில யோகிகள் நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். இமயமலைக்கு செல்கிறேனா அல்லது காசியில் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு பெரிய பாறையின் மீது நடக்கிறேன். அதுமட்டும் நினைவில் இருக்கிறது. அடுத்து நான் அதே காவி உடையில் என் வீட்டில் இருக்கிறேன் நான். என் மாமாவை சந்திக்கிறேன். நான் காசிக்கு அல்லது இமயமலைக்கு சென்று வந்தேன் என்று கூறுகிறேன். அவரிடம் நான் எதையோ கொடுக்கிறேன். அதை அவர் வாங்கிவிட்டு, நீ அங்கேயே இருந்துவிடலாமே என்றார். பின்னர் அவரே, அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவசரப்படாதே என்கிறார். அதோடு, இன்று காலை இங்குதான் இருந்தாய். மாலை இங்கு இருக்கிறாய். அதெப்படி ஒரே நாளில் காசிக்கோ அல்லது இமயமலைக்கோ சென்று வரமுடியும் என்று கேட்டார். நான் ஏதும் பேசாமல் மௌனம் காத்தேன். பிறகு கனவு கலைந்தது.

* தினேஷ்மாயா *

அட ஊதுங்கடா சங்கு

Tuesday, July 29, 2014


ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆன மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி

அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young

ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young

எருமைக்கு கூட Bluecross இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா..

அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
தமிழ் is my Mother …, I am single and I’m …
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young


படம் : வேலையில்லா பட்டதாரி
இசை: அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடியவர் : தனுஷ்

* தினேஷ்மாயா *

அம்மா அம்மா நீ எங்க அம்மா



அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் ?
வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்.


படம் : வேலையில்லா பட்டதாரி
இசை: அனிருத்
வரிகள் : தனுஷ்
பாடியவர் : தனுஷ்

* தினேஷ்மாயா *

ரமலான் நல்வாழ்த்துக்கள்

Monday, July 28, 2014



நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

அபிநயம்

Saturday, July 26, 2014













எத்தனை எத்தனை முகபாவங்கள் !!

* தினேஷ்மாயா *

தாரைவார்த்து


உன் தந்தை உன்னை 

எனக்கு தாரைவார்த்து கொடுத்தாலும்

நீ எப்பொழுதும் உன் வீட்டின் மகாராணியே !

* தினேஷ்மாயா *

திருமணம் என்னும் நிக்காஹ்



































































































































* தினேஷ்மாயா *

நெற்றிப்பொட்டு


நெற்றிப்பொட்டு..

நான் உன் வாழ்வில் வந்ததற்கான அடையாளம்..

* தினேஷ்மாயா *

பார்வை


நீ ஒரு பார்வை பார்த்தாலும் சரி,

ஓரப் பார்வை பார்த்தாலும் சரி..

நான் சரிந்துவிடுகிறேன்..

* தினேஷ்மாயா *

நீயே ராணி நீயே மந்திரி


உன் வீட்டை விட்டு

புது வீட்டிற்கு வருகிறாய் என வருந்தாதே..

இங்கு உனக்காக ஒரு 

புது அரண்மனையே ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்..

அங்கு நீயே ராணி நீயே மந்திரி !

* தினேஷ்மாயா *

காமத்திற்கு பின்


காதலிக்கும்போது இருந்த அன்பு

காமத்திற்கு பின்பும் அப்படியே இருந்தால் ..

அதுதான் உண்மையான காதல் !

* தினேஷ்மாயா *

மனம் விட்டு


திருமணத்திற்கு முன்பு

மனம் விட்டு பேசினால் மட்டுமே

திருமணத்திற்கு பின்பு

மனம் வலிக்காமல் வாழலாம்..

* தினேஷ்மாயா *