முதன் முதலில் இங்கே வந்தபோது
வாகன நெரிசலில் ஊர்ந்து செல்லும்
அவசர ஊர்த்தியை கண்டு
மனம் அதிகம் பதை பதைத்ததுண்டு..
பின்னாட்களில் -
சென்னையில் ஏதாவது சாலையில்
பயணம் செய்கையில் நிச்சயம் - தினமும் குறைந்தது
பத்து அவசர ஊர்த்திகள் இங்கும் அங்கும்
பறப்பதை காணவோ அல்லது
தொலைவில் பறப்பதை கேட்கவோ செய்திருக்கிறேன்..
அப்போதெல்லாம் முகம் தெரியாத
அந்த நபருக்காக பிரார்த்திப்பேன்..
சில மாதங்களாக சென்னையில் கடுமையான ஊரடங்கு..
சமீபத்தில்தான் ஊரங்கில் தளர்வுகள் வந்தது...
நேற்று என் மொட்டை மாடியில்
வழக்கம்போல் நடமாடிக்கொண்டிருந்தேன்..
பல மாதங்களுக்குப் பிறகு
அதே அவசர ஊர்த்தியின் சத்தம்
தொலைவில் இருந்து வந்து
என் நெஞ்சை தட்டிவிட்டு சென்றது...
நேற்று படித்த செய்தி நினைவுக்கு வந்தது..
“சென்னையில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்” !
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment