சுடோகு

Thursday, March 09, 2017





இப்போதெல்லாம் இளைஞர்கள் செய்தித்தாள் வாசிப்பது வெகுவாக குறைந்து வருகிறது. எனக்கு நேரம் கிடைக்கும்போது அன்றைய செய்தித்தாளை நிச்சயம் படித்துவிடுவேன்.

சிலர் செய்தித்தாளை எடுத்ததும், முதல் பக்கத்தை படிப்பர், சிலர் கடைசி பக்கத்தை படிப்பர், சிலர் நடுப்பக்கம், சிலர் சினிமா பக்கம், சிலர் விளையாட்டு செய்திகள்.. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் விருப்ப பக்கங்களை படிப்பர்.

ஆனால், செய்தித்தாள் வந்ததும் நான் செய்யும் முதல் செயல் என்ன தெரியுமா ? கையில் பேனா எடுத்துக்கொண்டு சுடோகு விளையாட ஆரம்பித்துவிடுவேன். பல நேரங்களில் சுமார் 5 நிமிடங்களுக்கும் அனைத்துவிதமான சுடோகுவை முடித்துவிடுவேன். சில சமயங்களில் என் பொறுமையை அதிகம் சோதிக்கும் சுடோகு எல்லாம் வரும். ஒரு சுடோகுவை 3 மணி நேரம் வரை அமர்ந்து அதை முடித்திருக்கிறேன். என்னவோ தெரியவில்லை, இந்த சுடோகு விஷயத்தில், அதை விளையாட ஆரம்பித்தால் நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்கிற ஒரு உத்வேகம் எனக்கு.

நீங்களும் நேரம் கிடைக்கையில் அதை விளையாடுங்களேன். மூளைக்கு நல்ல வேலை கொடுத்த மாதிரி இருக்கும்.

* தினேஷ்மாயா *

0 Comments: