பழனி
திருப்பரங்குன்றம்
பழமுதிர்சோலை
22.03.2017
இன்றுடன் 28 வயதை அடைந்தாயிற்று. ம்.. அட ஆமாங்க. 4 கழுதை வயசாச்சு. இதுவரை என் வாழ்க்கை எனக்கு தந்த அனுபவங்களுக்கு மிக்க நன்றி. இனிமேல் நான் வாழப்போகும் வாழ்க்கைக்கான பெரிய அஸ்திவாரம் இந்த 28 ஆண்டுகள். என் மனிதத்தன்மையை இழக்காமல் இருக்க எனக்கு இந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்தது. இந்த வருட பிறந்தநாளை வெறுமனே வீணாக்காமல், என் உயிர் தோழனான முருகப்பெருமானை தரிசிக்க ஆயத்தமானேன்.
22.03.2017 அன்று நள்ளிரவு 1 மணிக்கே கோவையில் இருந்து கிளம்பி பழனி சென்று முருகனை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தில் கண்டு , ஆண்டவனை ஆண்டிக்கோலத்தில் தரிசித்த ஆனந்த களிப்போடு, அங்கிருந்து கிளம்பி மதுரை சென்று பின் திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து அழகர்மலை உச்சியில் இருக்கும் பழமுதிர்சோலை முருகனையும் தரிசிக்கும் அருட்பேறு பெற்றேன். அனைத்து இடங்களுக்கும் பேருந்திலேயே பயணப்பட வேண்டியதால் நேரம் அதிகம் விரயமாகிவிட்டது. இல்லாவிடில், திருச்செந்தூர் முருகனையும் சென்று தரிசித்து வந்திருப்பேன். இருந்தாலும், ஒரே நாளிம் முருகப்பெருமானின் மூன்று படைவீடுகளை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு அவன் கொடுத்தமைக்கு அவனுக்கு கோடான கோடி நன்றி..
பின்னர் அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல் வந்து, பஞ்சம்பட்டியில் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்கிருக்கும் என் தம்பி, தங்கையரை பார்த்து அவர்களிடம் சிலமணி நேரங்கள் உரையாடிவிட்டு வந்தேன். அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நேரமும் என் வாழ்வின் மறக்க முடியாத வசந்த காலங்கள். தூய அன்பின் வெளிப்பாடு அது. எதையும் எதிர்பாராமல் அன்பை மட்டுமே பகிர்ந்துக்கொள்ளும் இல்லம் அது. அங்கே சென்று வரும் ஒவ்வொருமுறையும் நான் வார்த்தைகளற்ற ஊமையாகிவிடுகிறேன். அவர்கள் அன்பு என்னை ஊமையாக்கிவிடுகிறது. இந்த பிறந்தநாளை அருமையான நினைவுகளால் நிரப்பிவிட்டேன். அடுத்த பிறந்தநாளில் இன்னும் ஒருபடி மேலே உயர்ந்திருப்பேன், அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டேன். எல்லாம் அவன் கையில் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment