சமீபத்தில் என் நண்பன் பொதுவாக ஒரு கேள்வி கேட்டான். திருமணத்திற்கு பிறகு உன் மனைவி வேலைக்கு செல்ல வேண்டுமா இல்லை செல்ல கூடாதா என்று. யோசித்து சொல்கிறேன் என்று அவனிடம் சொன்னேன்.
என்னை நம்பி வந்திருக்கும் தேவதை அவள். என்னவள் என் மனைவி மட்டும் அல்ல. என் மகாராணி. என் இளவரசி. என்னில் பாதி. அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே நான் பாடுபடுகிறேன். அவள் என் இராணி. அவளை வேறொரு இடத்தில் சேவை செய்ய அனுப்புவதை என் மனம் ஏற்குமா ? அவள்தான் வீட்டை நிர்வகிக்கப்போகிறாள். என் சம்பளம் அவள் கையில். அவளுக்கான தேவைகள் அனைத்தும் அவள் கேட்காமலே பூர்த்தி செய்வேன். அவள் வேண்டும் என்று என்னிடம் கேட்கும்படி வைத்துக்கொள்ள மாட்டேன். குறிப்பு அறிந்து செயல்பட்டு அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று செய்யும் சத்தியமே அந்த மூன்று முடிச்சுக்கு அர்த்தம். அவள் கஷ்டப்படுவதை என்னால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும் ?
ஆனால், அவள் விரும்பினால், வேலைக்கு செல்வது அவளுக்கு சுமையில்லாமல் இருக்கும்பட்சத்தில், அவள் தனக்கு பிடித்த வேலையை செய்யலாம். பிறகென்ன, அவள் சந்தோஷம்தானே என் சந்தோஷம். என் சந்தோஷம்தானே அவளின் சந்தோஷம் !
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment