இந்த மாதம் முதல் வாரம், கர்நாடகா மகாராஷ்ட்ரா எல்லையில் இருக்கும் ஒரு ஊருக்கு செல்ல நேர்ந்தது. பயணம் இனிதாக அமைந்தது. ஆனால், பயணத்தின்போதும், அங்கு சென்று மக்களிடம் பழகும்போதும் என்னால் அவர்களுடன் சரியாக கலந்துரையாட முடியவில்லை. என் மனதில் இருக்கு கருத்துக்களையோ அல்லது கேள்விகளையோ என்னால் அவர்களிடம் முன்வைக்க முடியவில்லை. அப்படியே முன்வைத்தாலும் அவர்களால் ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை. என்னால் இந்தியிலோ, கன்னடத்திலோ அல்லது மராத்தியிலோ பேச முடியவில்லை.
என் சக இந்தியனிடம் என் கருத்துக்களை என்னால் பகிர்ந்துக்கொள்ள முடியாத என் நிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் பல கசப்பான உண்மைகள் வெளிவரும். சரித்திரத்தை புரட்டிப்பார்த்து என் நேரத்தை வீணடிப்பதைவிட எதிர்காலத்தில் என் சக இந்தியனிடம் சரளமாய் பேச இந்தியை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தமிழில் பேசுவது பெருமைதான், ஆனால் அதே சமயம் இந்தியில் பேசுவது அசிங்கம் ஒன்றுமில்லை தமிழர்களே. ஆதலால், இயன்றவரை உங்கள் பிள்ளைகளுக்காவது இந்தியை கொஞ்சம் ஊட்டுங்கள், இந்தியின் மீது பகை உணர்வை ஊட்டாதீர்கள். அதேசமயம் தமிழையும் பிழையின்றி கற்றுக்கொடுங்கள்.
நம் சக குடிமகனிடம் நம்மால் சரளமாக பேசும் நிலை வரவேண்டும்.. வரும்.. அது நம் ஒவ்வொருவரின் முயற்சியால் மட்டுமே நிகழும். அந்த மாற்றத்திற்கு நாம் அனைவரும் ஒன்றாக முயல்வோம்..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment