இதுதான் வளர்ச்சியா ?

Friday, April 18, 2014


   சமீபத்தில் செய்தி ஒன்றை படித்தேன். இந்திய விமானப்படையை சேர்ந்த ஒரு விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அதன் கருப்புப் பெட்டியை ஆராய்ந்து அதிலுள்ள தகவலை எடுத்துத்தர அந்த கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்படுவதாகவும் படித்தேன். 

  என்ன கொடுமைடா இது !!  

  நாம் இந்த விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து வாங்கியிருக்கிறோம், ஆனால் அதை பராமரிக்கும் வசதியோ அல்லது கோளாரை சரி செய்யும் வசதியோ நம்மிடம் இல்லை. ஆனால், பெருமைக்கு இதுப்போன்ற விமானங்களை வாங்கி குவிக்கிறோம். நாம் இதை குறை சொல்லவில்லை. ஆனால் நான் விரும்புவது என்னவென்றால், இனியும் எத்தனை காலம்தான் அயல்நாட்டை நம்பி இருப்பது. நாம் இன்னும் பலவிஷயங்களுக்கு வெளிநாட்டையே நம்பி இருக்கிறோம். இந்த நிலை மாறியே ஆகவேண்டும்.

   இங்கு பொறியியல் படித்த இளைஞர்கள், வங்கியிலும் பல தனியார் நிறுவனங்களிலும்தான் அதிகம் வேலைப்பார்க்கின்றனர். அதுவும் மாதம் 10000 ரூபாய் கிடைத்தால் போதும் என்கிற நிலையில் ஏதாவது ஒரு வேலையை பார்த்துக்கொள்கின்றனர். அவர்களை எல்லாம் நாம் நமது ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தவேண்டும். அவர்களின் திறமைகளை இனிமேலும் ஒதுக்ககூடாது. 

  பல திறமைசாலிகளை இந்தியா உருவாக்குகிறது. ஆனால் அந்த திறமைசாலிகளுக்கு ஏற்ற வேலையை இந்தியா உருவாக்கவில்லை. நேற்று எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து தூதஞ்சல் வந்தது. அதை எனக்கு கொண்டுவந்து கொடுத்தவர் ஒரு பொறியியல் படித்த இளைஞர். பொறியியலுக்கும் COURIER-வேலைக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ?

   இதுதான் இன்றைய இந்தியாவில் நிலை. இதுதான் வளர்ச்சியா சொல்லுங்கள்? 

    திறமைக்கேற்ப வேலை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் கிடைத்தால் இந்தியா இனிமேலும் எந்த அயல்நாட்டையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து....

   பொறுத்திருந்து பார்ப்போம் !!!

* தினேஷ்மாயா *

0 Comments: