ஜாதகம் பார்க்கலாமா ?

Friday, April 18, 2014



    பல ஆண்டுகளாக இருந்துவரும் கேள்விதான் என்றாலும், நானும் என் கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன்.


   “ஜாதகம் பார்க்கலாமா?”

   நேரம் காலம் ஜாதகம் பார்த்து செய்யும் அனைத்து வேலைகளும் நன்மையிலேயே  முடிந்திருக்கிறதா என்ன ?

  ஜாதகம் பார்க்காமல் செய்த அனைத்து வேலைகளும் தோல்வியிலா முடிந்திருக்கிறது ?

  ஜாதகம் பார்த்து செய்துவைத்த திருமணங்கள் எத்தனையோ தடம் மாறி போயிருக்கிறது. எதுவும் பார்க்காமல் செய்த திருமணங்கள் இன்றும் சுகமாய் வாழ்ந்து காட்டுகிறது.

   எந்த விஷயத்தையும் முடிவு என்னவென்று தெரியாமல் அதை செய்யும்போதுதான் நமக்கு ஒரு புது நம்பிக்கை பிறக்கும். எப்படியாச்சும் அந்த வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று. முடிவு தெரிந்து ஒரு விஷயத்தை செய்வதில் என்ன இருக்கப்போகிறது சொல்லுங்கள். இரு அணிகள் மோதும் விளையாட்டில் எந்த அணி வெல்லும் என்று தெரிந்துவிட்டால், விளையாடுபவர்களுக்கும் சரி விளையாட்டை பார்ப்பவர்களுக்கும் சரி ஒரு சுவாரஸ்யமே இருக்காது.

   ஜாதகம் பார்த்து செய்யும் அனைத்து வேலைகளும் நன்மையில் மட்டுமே முடிவதில்லை. எந்த வேலையையும் நேரம் காலம் ஜாதகம் பார்க்காமல் செய்யுங்கள். எல்லாம் நன்மைக்கே என்பதை மறக்க வேண்டாம். எது நடந்தாலும் அதை ஒரு நல்ல அனுபவமாக கருதி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வோம். இன்னும் மூட நம்பிக்கைகளில் திழைத்திருக்க வேண்டாமே !!

* தினேஷ்மாயா *

0 Comments: